சிங்கப்பூரில் ஒன்பது உணவு மற்றும் பானங்கள் (F&B) விற்பனை செய்யும் நிலையங்களின் மதுபான உரிமங்கள் காவல்துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு பொது பொழுதுபோக்கு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. கோவிட் -19 பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் மீறப்பட்டது தான் பல வழக்குகளுக்கு காரணம் என்று நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 12) வெளியிட்ட ஒரு அறிக்கையில் காவல்துறை தெரிவித்துள்ளது.
தண்டனைக்கு உள்ளன விற்பனை நிலையங்கள் : கடற்கரை சாலையில் உள்ள Steamov Steamboat Buffet Restaurant; டல்ஹவுசி லேனில் Buzzed Pub; சந்தர் சாலையில் ஓம்ஸ் கார்டன்; Magazine சாலையில் ஹரு பார்; டார்ட்ஸ் லெஜண்ட் மற்றும் தி ஐடில், மீடியா சர்க்கிளில்; மற்றும் MZS பேமிலி கரோக்கி மற்றும் H.O.Mன் இரண்டு அலகுகள் ஆகிய ஆகும்.
இந்த நிறுவனங்களில் அமலாக்கச் சோதனைகள் நடந்தபோது, ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உடல்ரீதியான தொடர்புகளைக் குறைக்கவில்லை அல்லது குழு அளவுகள் சமூகக் கூட்டங்களில் நடைமுறையில் உள்ள வரம்பை மீறாமல் இருப்பதை உறுதிசெய்யவில்லை என்ற தரநிலைகளின் அடிப்படையில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையங்கள் இரவு 10.30 மணிக்குப் பிறகு மதுபானம் விற்பனை நடத்தியதும் மற்றும் வளாகத்தில் பகடை மற்றும் பிற உள் அரங்க விளையாட்டுகளை வழங்கியது கண்டறியப்பட்டது. ஒன்பது நிறுவனங்களும் 10 முதல் 30 நாட்கள் வரையிலான காலகட்டத்திற்கு மூடல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. மேலும் அந்த நிறுவனங்கள் அவர்களுக்கான அபராதங்களை பெறலாம் என்றும் அல்லது கூடுதலாக வழக்கு தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது.