TamilSaaga

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உச்சம்.. சிங்கப்பூரில் அதிகரிக்கும் “அடிப்படை பணவீக்கம்” – விலையேற்றம் தான் காரணமா? MAS விளக்கம்

பொதுவாக விலையேற்ற விகிதத்தைத் தான் பணவீக்கம் என்று கூறுவார்கள், அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய பணவீக்கத்தை நமது சிங்கப்பூர் கடந்த மார்ச் மாதத்தில் கண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

புள்ளிவிவரங்களோடு சொன்னால் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்த 2.2 ஆக இருந்த பணவீக்கம், சென்ற மார்ச் மாதத்தில் 2.9ஆக அதிகரித்துள்ளது. இன்று ஏப்ரல் 25ம் தேதி வெளியான சில அதிகாரப்பூர்வ தரவுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இதேபோல பணவீக்கம் 2.9 என்ற அளவை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி பண வீக்கத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணத்தை தற்போது பார்க்கலாம். எடுத்துக்காட்டாக 2010ம் ஆண்டு கோதுமை விலை கிலோ 0.5 வெள்ளி இருந்த நிலையில் 2011ம் ஆண்டில் அது இருமடங்காக, அதாவது கிலோவிற்கு 1.2 வெள்ளி என்று மாறினால் அங்கு விலை ஏற்ற விகிதம் 111 சதவிகிதம் அதிகரிக்கிறது இதுவே பணவீக்கம்.

இந்தியாவிற்கான பயணிகளின் அளவை அதிகரிக்கும் Singapore Airlines.. களமிறங்க காத்திருக்கும் Airbus A380 – பல Exclusive தகவல்கள்

சிங்கப்பூரிலும் உணவு மற்றும் பிற சேவைகளுக்கான உயர் பணவீக்கமே இந்த உயர்வுக்கு காரணம் என சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

MAS அளித்த தகவலின்படி பணவீக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும், இந்த ஆண்டு பணவீக்கம் 4.5 முதல் 5.5 ஆக உயர வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts