சிங்கப்பூரில் அறிவியலாளர்கள் மற்றும் பல அமைச்சர்கள் எச்சரித்ததை போலவே தற்போது தொற்றின் அளவு அதிகமாகிக்கொண்டே வருகின்றது. சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) நண்பகல் நிலவரப்படி 832 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதில் 755 சமூக வழக்குகள் மற்றும் 77 பேர் தங்குமிட விடுதிகளில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய உள்ளூர் வழக்குகளில், 231 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
ஜூரோங் கிழக்கில் உள்ள அனைத்து புனிதர்கள் இல்லத்தில் இரண்டு புதிய பெரிய கிளஸ்ட்டர்கள் மற்றும் துவாசில் ஒரு தங்கும் விடுதியில் புதிய தொற்று குழுமம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 வழக்குகளைக் கொண்ட நர்சிங் ஹோம் கிளஸ்டர் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே பரவுவதில் இருந்து வெளிப்பட்டது என்று MOH கூறியுள்ளது.
மேற்குறிப்பிட்ட “10 வழக்குகளில், ஒன்பது குடியிருப்பாளர்கள் மற்றும் ஒருவர் ஊழியர். பாதிக்கப்பட்ட மட்டத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் சோதனை செய்யப்பட்டுள்ளனர்” மாற்றும் நேற்று செவ்வாய்க்கிழமை வரை அதன் ஒன்பது குடியிருப்பாளர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் கோவிட் -19 நோயால் கண்டறியப்பட்டதாக நர்சிங் ஹோம் வெளியிட்ட ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
MOH குடியிருப்பாளர்களிடையே உள்-தங்குமிடம் பரிமாற்றம் நடந்து வருவதாகவும், 19 புதிய வழக்குகள் முன்பு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதே சமயம் வெளிநாடுகள் இருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.