சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 11) நண்பகல் நிலவரப்படி தீவில் 550 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 486 சமூக வழக்குகள் மற்றும் 64 “விடுதிவாசிகள்” அடங்குவர். மேலும் உள்ளூர் வழக்குகளில் 145 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
மேலும் 44 புதிய வழக்குகளுடன் சைனாடவுன் வளாகம் உட்பட மேலும் இரண்டு பெரிய கிளஸ்ட்டர்கள் சிங்கப்பூரில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது கிளஸ்டருடன் இணைக்கப்பட்ட மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 66ஆகக் உயர்த்தியுள்ளது. அதில் 58 பேர் ஸ்டால் வைத்திருப்பவர்கள் மற்றும் உதவியாளர்கள், நான்கு கிளீனர்கள், ஒரு Safe Distancing தூதர் மற்றும் மூன்று வீட்டு தொழிலாளர்கள் அடங்குவர்.
மற்ற பெரிய கொத்து PCF Sparkletots Braddell Heights, 335 Serangoon Avenueல் அமைந்துள்ளது. மூன்று புதிய வழக்குகள் மற்றும் மொத்தம் 22 நோய்த்தொற்றுகள் இந்த கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் ஒரு பால் தொற்று எண்ணிக்கை 568ல் இருந்து சற்று குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சைனாடவுன் வளாகம் பொதுமக்களுக்கு செப்டம்பர் 15 இறுதி வரை மூடப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சாத்தியமான பரிமாற்ற சங்கிலியை உடைத்து, ஆழமான சுத்தம் செய்யும் பணிக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று MOH தெரிவித்துள்ளது.