TamilSaaga

நோய் பரவலை கட்டுப்படுத்த சிங்கப்பூரின் “புதிய யுக்தி” : அந்த 5 யுக்திகள் என்ன? – ஒரு Detailed ரிப்போர்ட்

சிங்கப்பூரில் கடந்த வாரம் பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,200க்கும் அதிகமாக இரட்டிப்பாகிவிட்ட நிலையில், நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க புதிய நடவடிக்கைகள் சில நேற்று திங்கள்கிழமை (செப்டம்பர் 6) அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிக மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறிது நேரத்தை அளிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அதிக எச்சரிக்கை அல்லது சர்க்யூட் பிரேக்கர் நிலைக்கு திரும்பாமல் பரிமாற்றத்தை மெதுவாக்க வேண்டும் என்று நிதி மந்திரி லாரன்ஸ் வோங் கூறினார்.

முதலாவதாக நாட்டில் புதிய கிளஸ்டர்கள் கண்டறியப்படும்போது HRW என்றழைங்கப்படும் Health risk warnings மற்றும் Health Risk Alerts எனப்படும் HRA அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஒரு கிளஸ்ட்டர் அடையாளம் காணப்பட்டவுடன், அந்த பகுதியில் பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த HRA மற்றும் HRW விதிக்கப்படும். அதேசமயம் இந்த எச்சரிக்கைகள் தனிமைப்படுத்தப்படும் உத்தரவுகள் (QO) அல்ல, மாறாக இது ஒரு தொற்று நோயின் கேரியர் அல்லது சந்தேகிக்கப்படும் ஒரு நபரை அவரே தனிமைப்படுத்திக்கொள்ள வழங்கப்பட்ட சட்ட உத்தரவுகளாகும்.

HRW வழங்கப்பட்டவர் PCR சோதனை மேற்கொள்ளவேண்டும்.

அதிகமான துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடிக்கடி வேகமான மற்றும் எளிதான வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்

இரண்டாவதாக அதிகமான துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடிக்கடி வேகமான மற்றும் எளிதான வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். பொதுப் போக்குவரத்து முன்கள ஊழியர்கள் மற்றும் பல்பொருள் அங்காடித் தொழிலாளர்கள் உட்பட பல துறைகளில் உள்ள தொழிலாளர்கள் இப்போது கட்டாய மற்றும் சுலபமான வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மூன்றாவதாக கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்படாத துறைகளில் உள்ள நிறுவனங்களில் உள்ள ஒரு ஊழியருக்கு 8 ART சுய பரிசோதனை கருவிகள் வழங்கப்படும். இரண்டு மாத காலத்திற்கு ஊழியர்களின் வாராந்திர சோதனையை எளிதாக்குவதற்காக, ஒரு ஊழியருக்கு 8 விரைவு சோதனை (ART) கருவிகளை அரசாங்கம் வழங்கும். மேலும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஆன்சைட் ஊழியர்களுக்கான வாராந்திர சோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவதாக சமூகக் கூட்டங்களை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே கலந்துகொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்த இரண்டு வாரங்களுக்கு, சிங்கப்பூரில் உள்ள மக்கள் தங்களை ஒரு நாளைக்கு ஒரு சமூகக் கூட்டத்திற்கு (மற்றொரு வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ) மட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பணியிடங்களில் சமூகக் கூட்டங்கள் வரும் புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவதாக கோவிட் -19 தடுப்பூசி பூஸ்டர் ஷாட்கள் இளையவர்களுக்கும் வழங்க பரிசீலிக்கப்படுகிறது

Related posts