TamilSaaga

சிங்கப்பூரில் ஒரே வருடத்தில் 4400 புகார்கள் – பறந்து வந்து தொல்லை தரும் புறாக்கள்

சிங்கப்பூரில் கடந்த ஓராண்டில் புறாக்களின் தொல்லை அதிகரித்திருப்பதாக ஆயிரக்கணக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. துவைத்து காய வைக்கும் துணிகளையும், சன்னல்களையும் புறாக்கள் அடிக்கடி அசுத்தம் செய்வதாக பல வட்டார வாசிகள் மிகுந்த வேதனை அடைகின்றனர்.

இருப்பினும் புறாக்களை கொள்வதை அவர்கள் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினைகளை சமாளிக்க மக்கள் புறாக்களுக்கு தீனி போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் உணவுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக புறாக்கள் மூலம் தொந்தரவு வருவதால் பலர் தங்கள் வீட்டு ஜன்னல்களை திறப்பதே இல்லை என்று கூறுகின்றனர். அங் மோ கியோ ப்ளாக்கில் 12வது மாடியில் வசிக்கின்ற திரு. கோ-வின் வீட்டுக்கு மேல் புறாக்கள் கூடு காட்டியுள்ளது.

தீவு முழுவதும் புறாக்களினால் பிரச்சினை இருப்பதாக பலர் கூறுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 4,400 புகார்கள் தேசிய பூங்கா கழகத்திற்கு புறாக்கள் குறித்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு முழுமைக்கும் கிடைத்த புகார்களின் எண்ணிக்கை சுமார் 8,200.

Related posts