TamilSaaga

“வனவிலங்கு பூங்காக்களில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தற்போது இல்லை” – சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம்

சிங்கப்பூர் உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்கு பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தற்போது இல்லை என்று சிங்கப்பூர் மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் நைட் சஃபாரியில் நான்கு ஆசிய சிங்கங்களும் சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் ஒரு ஆப்பிரிக்க சிங்கத்திற்கு பெருந்தொற்று உள்ளது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 10 அன்று மாண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான ஒரு பதிவில், நைட் சஃபாரியில் உள்ள சிங்கங்கள் இப்போது குணமடைந்து “நன்றாகவும், சுறுசுறுப்பாகவும்” உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஆபத்து மிகக் குறைவு என்று விலங்குகள் நலத்திற்கான உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆயினும்கூட, அவர்கள் ஓய்வெடுக்கும் போது, ​​நாங்கள் அவர்களின் கண்காட்சியை தற்காலிகமாக முடியுள்ளோம். வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி!” என்று தெரிவித்துள்ளனர்.

Related posts