TamilSaaga

சிங்கப்பூரில் மீண்டும் ஒரு மரணம்.. கொரோனாவுக்கு பலி 43 ஆக உயர்வு – MOH தகவல்

சிங்கப்பூரில் 69 வயதான ஆண் ஒருவர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்து உள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிசெய்தது.

கோவிட் வழக்கு எண் 66910 என குறிப்பிடப்பட்டுள்ள அந்த நபர் ஆகஸ்ட் 11, 2021 அன்று கோவிட் -19 தொற்று காரணமாக காலமானார் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அவர் ஜூலை 28 அன்று அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்து ஜூலை 29 அன்று டான் டாக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோவிட் -19 தொற்று சோதனை செய்து அது பாசிட்டீவ் என உறுதியாகியுள்ளது.

அவர் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை, மேலும் பக்கவாதம், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியாவின் நோய் வரலாறு அவருக்கு இருந்தது.

மொத்தத்தில், இதுவரை கோவிட் -19 காரணமாக சிங்கப்பூரில் 43 பேர் இறந்துவிட்டனர். மிகச் சமீபத்திய இறப்பானது ஆகஸ்ட் 7 அன்று பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி மதியம் 12 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் 63 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக MOH உறுதிப்படுத்தியது.

இதன் மூலம் சிங்கப்பூரில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 65,953 ஆக உள்ளது.

Related posts