TamilSaaga

சிங்கப்பூரில் கணவர்.. தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள்.. 4 மாத கர்ப்பத்துடன் 22 வயது “பேஸ்புக் காதலுடன்” மாயமான தாய்.. சிங்கப்பூரில் கூனிக் குறுகி நிற்கும் கணவர்.. வீட்டுக்குள் முடங்கிய மகன்கள்!

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட கூடா உறவால் இன்று ஒரு குடும்பமே திக்கற்று நடுத்தெருவில் நிற்கிறது.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா. வயது 40. இவர்களுக்கு 22 வயது மற்றும் 19 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ஒரத்தநாட்டில் வாடகை வீட்டில் லலிதா தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த செப்.16ம் தேதி இரவு வீட்டில் இருந்த 10 பவுன் நகை, பணம் ஆகியவை காணாமல் போக, லலிதாவும் மாயமானார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் லலிதாவின் மூத்த மகன் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், விசாரணையை துரிதப்படுத்தினர். இதில், அதிர்ச்சிகரமான சில உண்மைகள் வெளியாகியது. அதாவது, லலிதாவுக்கு பேஸ்புக் மூலம் கடலூரைச் சேர்ந்த 22 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட தன் மகன் வயதுடைய ஒரு இளைஞர் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே இருவரும் யாருக்குமே தெரியாமல் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்திருக்கின்றனர். தன்னை இளமையாக காட்டிக் கொள்ள மாடர்ன் டிரஸ்களை அணிந்து, அந்த இளைஞருக்கு அனுப்பி வந்துள்ளார். எத்தனை நாள் தான் இப்படி புகைப்படங்களையே பார்ப்பது என்று கேட்ட அந்த இளைஞர், நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

பிறகு, லலிதா மீது மோகம் காரணமாக கடலூரில் இருந்து ஒரத்தநாடுக்கு வந்த அந்த இளைஞர், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டும் நேரம் போக, மீதி நேரத்தில், லலிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அதன் விளைவாக, லலிதா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் படிக்க – 30 நிமிடங்கள்.. சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்டில்.. விமானத்திற்குள் இருளில் தத்தளித்த பயணிகள் – எல்லா பவரும் கட்!

தான் கர்ப்பமானதால், அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த லலிதா, வீட்டில் இருந்த 10 பவுன் நகை, பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இளைஞருடன் ஊரை விட்டு வெளியேறி, கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு, தான் மணக்கோலத்துடன் இருக்கும் புகைப்படத்தையும், தான் பேசிய ஒரு ஆடியோவையும் சிங்கப்பூரில் உள்ள கணவர் ஐயப்பனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில், ‘இனி எனக்கு பிடித்த மாதிரி என்னை வாழ விடுங்க. என்னை தேட வேண்டாம். நீங்களும் நல்லா இருங்க. நானும் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கேன். அதுமட்டுமில்ல இப்போ நான் 4 மாதம் கர்ப்பமா இருக்கேன்” என்று லலிதா பேசியுள்ளார்.

இதையடுத்து, இவையனைத்தையும் ஆதாரங்களாக சேகரித்துக் கொண்ட போலீசார், மாயமான லலிதாவையும் அந்த இளைஞரையும் தேடி வருகின்றனர்.

தன்னுடன் இருக்க வேண்டிய மனைவி, வேறொரு நபருடன் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தையும், ஆடியோ பதிவையும் கேட்டு ஆடிப்போன ஐயப்பன், தனது மகன்களை தொடர்பு கொண்டு இனிமேலும் அப்படியொரு அம்மா நமக்கு வேண்டாம். அவர் திரும்பி வந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று ஆறுதல் கூறியுள்ளார். இனி எப்படி வேலைக்கு செல்வேன் என்று மூத்த மகனும், எப்படி கல்லூரிக்கு செல்வேன் என்று இளையமகனும் கண்ணீருடன் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts