TamilSaaga

சாகும் வயதா இது? 34 வயதான இந்திய தொழிலாளி கட்டுமான பணியின் பொழுது அகால மரணம்!

சிங்கப்பூரில் பாசிர் ரிஸ் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளி கம்பி வடத்தினை இழுக்கும் பணியில் ஈடுபட்ட பொழுது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பி வடத்துடன் இணைக்கப்பட்ட உலோக தாங்கியானது விலகியதன் காரணமாக கம்பி ஒன்று அவர் மீது விழுந்ததாக தெரியவந்துள்ளது.

34 வயது நிரம்பிய அவர் சாங்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பொழுது உயிரிழந்துள்ளார். சிங்கப்பூரில் கட்டுமான தொழிலில் பணிபுரியும் தமிழக ஊழியர்கள் உயிரிழக்கும் பணியானது அவ்வப்போது நாம் கேள்விப்பட்ட பொழுதிலும் 34 வயதான இளைஞர் இறந்துள்ள சம்பவம் அனைவரிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒட்டி குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டுமான பணியை உடனே நிறுத்தி வைக்கும்படி மனித வள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இதே மாதத்தின் தொடக்கத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கட்டுமான பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இதுவரை மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related posts