TamilSaaga

Singapore Book of Recordsல் இடம்பிடித்த 3 வயது குழந்தை – 8 நிமிடத்தில் 200 நாடுகளின் கொடிகளை அடையாளம் காணும் அசாத்திய திறமை

சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பார்கள், அது உண்மை தான். உலக அளவில் எத்தனையோ வகையான சாதனைகளை 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முறியடித்துள்ளார். ஏன் அண்மையில் 102 வயது முதியவர் ஒருவர் மாரத்தான் ஓடிய கதைகளை எல்லாம் நாம் கேட்டிருப்போம். அதேபோலத்தான் இந்த பதிவிலும் சாதித்த ஒரு மனிதரை பற்றி பார்க்கவிருக்கிறோம். ஆனால் நாம் காணவிருப்பது 102 வயது முதியவர் பற்றியல்ல, இன்னும் மூன்று வயது கூட முழுமையாய் முடிவடையாத ஒரு மழலையை பற்றித்தான்.

“உதவி என்றதும் கொட்டும் மழையிலும் களமிறங்கிய புலம்பெயர்ந்த தொழிலாளி” – சிங்கை உள்ளங்களை கொள்ளை கொண்ட Indian Hero

Ezac Lim Ee Zher என்ற இந்த சிங்கப்பூர் சுட்டிக்கு வயது 2 வருடம் 11 மாதம் மட்டுமே, ஆனால் குறுநடை போடும் இந்த செல்லக்குழந்தை 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கொடிகளை கொண்டே அதன் பெயர்களை கூறும் ஆற்றல் கொண்டவனாக உள்ளான். அதுவும் ஆற அமர பொறுமையாக கூட இல்லை, இந்த லிட்டில் சாம்பியனால் ஏழு நிமிடங்கள் 33 வினாடிகளில் 200 கொடிகளை பெயரிட முடியும். தற்போது இவருடைய பெயர் Singapore Book of Recordsல் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது.

8 World என்ற நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், அவரது தந்தை லிம் லி வெய், தங்கள் வீட்டின் சுவர்களில் ஒன்றில் உலக வரைபடத்தை வைத்திருப்பதாகப் பகிர்ந்து கொண்டார். மேலும் எசாக் பேச கற்றுக்கொண்டதிலிருந்து நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பெயர்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் என்றும் அவர் கூறினார். மேலும் கடந்த ஜனவரி 2022 முதல், Ezac தனது பெற்றோரின் வழிகாட்டுதலின் மூலம் வெவ்வேறு கொடிகளை அடையாளம் காண கற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கழட்டிவிட்ட மலேசியா.. கர்ஜிக்கும் சிங்கப்பூர்.. எதிர்பார்ப்புடன் வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் ஜெயிக்க வைப்பது சிங்கப்பூரா? மலேசியாவா?

தொடர்ச்சியாக அந்த சிறுவன் இன்னும் பல உலக சாதனைகளை முறியடிக்க ஆயத்தமாகி வருகின்றார் என்று அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts