TamilSaaga
Jurong Dormitory

வராண்டாவில் கோவிட் நோயாளிகள்? பொங்கிய வெளிநாட்டுப் பணியாளர்கள்.. குவிந்த போலீஸ் – ஜுரோங் விடுதியில் நடந்தது என்ன?

ஜூரோங்கில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் கோவிட்-19க்கு முறையான மருத்துவ பராமரிப்பு இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சுகாதார மையங்களுக்கு மாற்றுவது தாமதமாகியுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பல விடுதிகளில் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருக்கும் அறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இதனால், பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து, கூட தங்கியிருந்த ஒரே காரணத்திற்காக மற்றவர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், ஜூரோங்கில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் விடுதியில் இருந்து பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சுகாதார மையங்களுக்கு மாற்றுவது தாமதமாகியுள்ளது. விடுதியில் உள்ள செம்ப்கார்ப் மரைன் (SembCorp Marine) தொழிலாளர்களிடையே நோய்த் தொற்று “அதிகரிப்பு” காரணமாக சுகாதார மையங்களுக்கு மாற்றுவது தாமதமாகிறது என்று dormitory ஆபரேட்டர் கூறியுள்ளார்.

செஞ்சுரியன் கார்ப்பரேஷன் இயக்கும் வெஸ்ட்லைட் ஜலான் துகாங் (Westlite Jalan Tukang) விடுதியில் தான் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

அங்குள்ள தொழிலாளர்கள் முறையான மருத்துவ உதவி வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சரியாக தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருக்கும் 2,000 தொழிலாளர்களில் கால் பகுதியினர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக Wechat-based news portalல் பணியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல ஆன்லைன் தங்களில் பதவிடப்பட்டுள்ளது. அதன் மூலம் தங்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தங்கள் விரக்தியை தொழிலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆன்லைனில் வெளிவந்த புகைப்படங்களில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அறைகளுக்கு வெளியே நடைபாதைகளில் படுத்துக் கிடப்பதாக தெரிகிறது.

அந்த விடுதியில் தங்கியிருக்கும் திரு.ரென் (41) என்று அழைக்கப்பட விரும்பும் ஒருவர், மருத்துவ உதவி இல்லாததால் அந்த விடுதியில் தங்கியிருப்பவர்கள் விரக்தியடைந்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர், “விடுதி நிர்வாகம் நோய்வாய்ப்பட்டவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை – இங்கு உள்ளவர்கள் சுமார் ஏழு அல்லது எட்டு நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்தனர்,” என்று கூறியிருக்கிறார்.

ஒருக்கட்டத்தில் அந்த விடுதியில் தங்கியிருந்த தொழிலாளர்கள் தொடர்ந்து கூச்சலிட, புதன்கிழமை மதியம் 1 மணியளவில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். Special Operations Command-லிருந்து குறைந்தது நான்கு வாகனங்கள் விடுதிக்கு வெளியே நிறுத்தப்பட்டன. போலீஸ் அதிகாரிகள் மற்றும் வாகனங்களும் விடுதியில் காணப்பட்டன.

இந்நிலையில், சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், அந்த விடுதியில் சுகாதார நெறிமுறைகளை மீறியது, முறையான மருத்துவ உதவி இல்லாமை மற்றும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கோவிட் -19 தொற்று ஏற்பட்ட தொழிலாளர்களை உரிய மருத்துவ வசதிகளுடன் கூடிய இடத்துக்கு மாற்றுவதில் உண்மையில் தாமதங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இப்போது, அரசு துரிதமாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

(News Source – THE STRAITS TIMES)

Related posts