சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் தங்குமிடங்களில் வசிக்கும் 3,000 முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இது வாரத்திற்கு 21,000 தொழிலாளர்களுக்கு பொது இட்ச்ங்களுக்கு செல்ல வழிவகை செய்கிறது. தற்போது வாரத்திற்கு 3,000 என்ற வரம்பு உள்ளது.
தொழிலாளர்கள் இனி லிட்டில் இந்தியா அல்லது கெயிலாங் செராய்க்கு மட்டும் செல்லலாம் என்று கட்டுப்படுத்தப்பட மாட்டார்கள். மேலும் அவர்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்குள்ள பொழுதுபோக்கு மையங்களுக்கு தினசரி வருகைக்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது வாரத்திற்கு மூன்று முறை என்ற அளவில் உள்ளது. இந்த வருகைகள் இப்போது நான்கு மணிநேரத்தில் இருந்து எட்டு மணிநேரமாக நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்படாத தொழிலாளர்கள் பொழுதுபோக்கு மையத்திற்குச் செல்வதற்கு முன் ஆன்டிஜென் ரேபிட் சோதனையை எடுக்க வேண்டும் அல்லது அவர்களின் பட்டியலிடப்பட்ட வழக்கமான சோதனையின் எதிர்மறையான சோதனை முடிவைப் பெற்று அதனை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி போடப்பட்டவர்கள் முன்கூட்டியே எந்த பரிசோதனையும் செய்ய வேண்டியதில்லை.
நாடளாவிய ரீதியில் எட்டு பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன மற்றும் தொழிலாளர்கள் தற்போது ஒரு நிலையான மையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து, தொழிலாளர்கள் எட்டு மையங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் திங்கள்கிழமை (நவம்பர் 15) கோவிட்-19 பல அமைச்சக பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான இயக்கக் கட்டுப்பாடுகள் கடந்த அக்டோபர் 30 அன்று தளர்த்தப்பட்டன. அப்போது தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு 500 லிருந்து 3,000 ஆக அதிகாரிகள் அதிகரித்தனர்.
செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த சமூக வருகைகளை அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக டாக்டர் டான் கூறினார்.
பங்கேற்பாளர்களிடையே இதுவரை எந்த தொற்றுநோயும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.