TamilSaaga

சிங்கப்பூரில் 2 இளைஞர்களுக்கு கூரையை பிச்சுக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. அதுவும் இரண்டு முறை – திறமைக்கார பசங்கதான்!

அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை தட்டும் என்ற அந்த கூற்றை மாற்றியுள்ளனர் இரு சிங்கப்பூர் சிங்கக்குட்டிகள். காரணம் இவர்களுக்கு அதிர்ஷ்டம் இரண்டு முறை கதவை தட்டி இரண்டு முறை S$1,00,000ஐ கொடுத்துள்ளது. Hunt The Mouse விளையாட்டை பற்றி சிங்கப்பூரில் தெரியாத இளைஞர்களே இல்லை என்று கூறலாம். தெரியவில்லை என்றால் இந்த இணையத்தில் சென்று பார்க்கலாம், சிங்கப்பூரின் பல இடங்களில் Virtual முறையில் இந்த விளையாட்டை நீங்கள் விளையாட முடியும். குறிப்பிட்ட முகநூல் மற்றும் Telegram பக்கங்களில் வெளியாகும் குறிப்புகளை கொண்டு சிங்கப்பூரில் உள்ள இடங்களில் Virtual முறையில் நீங்கள் தோண்டினால் உண்மையான காசு கிடைக்கும்.

இந்தியர்களே… சிங்கப்பூருக்கு கிளம்ப தயாராகுங்க… 11 ஆண்டுகளில் இல்லாத “உச்சபட்ச” வேலைவாய்ப்பு- வேலை தேடுவோருக்கு காது குளிர வந்திருக்கும் ManpowerGroup சர்வே

இந்நிலையில் கடந்த 2019ம் (தொற்றுக்கு முன்பு) ஆண்டு இந்த விளையாட்டை விளையாடிய அந்த இரண்டு இளைஞர்களுக்கும் அப்போது 1,00,000 வெள்ளி கிடைத்தது. அதே இரு அதிர்ஷ்டசாலிகள் இந்த 2022ம் ஆண்டில் வெளியான Hunt The Mouse – Safe Distance Edition என்ற அந்த புதிய பதிப்பிலும் விளையாடி அதே தொகையை பெற்றுள்ளனர். வெஸ்லி மற்றும் ஷஃபிக் என்ற அந்த இரு இளைஞர்கள் முதன்முதலில் 2019ம் ஆண்டில் முறையே 21 மற்றும் 30 வயதாக இருந்தபோது Hunt The Mouse Grand விளையாட்டில் முதல் பரிசை வென்றனர். ஹூகாங்கில் உள்ள ஒரு தனியார் வீட்டின் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் தான் அவர்கள் S$1,00,000 மதிப்புள்ள தங்க நாணயத்தைக் கண்டுபிடித்தனர்.

ஜெயித்தது அவர்கள் இருவராக இருந்தாலும் தங்கள் தேடலுக்கு உதவிய மேலும் ஏழு பேருக்கு அந்த பரிசுத் தொகையைப் பிரித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி 16, 2022 அன்று இரவு 9:06 மணியளவில் இப்பொது 33 வயதான வெஸ்லியும் 24 வயதான ஷஃபிக்கும் அந்த Hunt The Mouse புதிய எடிஷனில் தங்கள் வெற்றியை மீண்டும் பதிவு செய்துள்ளனர். இந்த முறை மேலும் நான்கு நண்பர்களுடன் இணைந்து குயின்ஸ் க்ளோஸில் உள்ள ஸ்கைபிரிட்ஜில் 796மீ கீழே தரையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்க நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

சிங்கப்பூரில் 99,000 முதலாளிகளுக்கு “840 மில்லியன் டாலர்கள்” உதவித் தொகை – இனியாவது வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்தந்த Pass-க்கு ஏற்ற உண்மையான சம்பளம் கிடைக்குமா?

ஆமா எப்படி ரெண்டு முறை பரிசை தட்டி சென்றார்கள்?

இந்த Mouse கேம் அமைப்பாளராக இருக்கும் Sqkiiன் சமூக ஊடக சேனல்களில் வெளியிடப்பட்ட தொடர்ச்சியான வீடியோக்களில், வெஸ்லி, ஷஃபிக் மற்றும் அவர்களது அணி வீரர் யூ சின் ஆகியோர் தங்களின் சில உத்திகளைப் பகிர்ந்து கொண்டனர். அதில், தங்களுக்கு முகநூல் மற்றும் Telegram மூலம் கிடைக்கும் எல்லா குறிப்புகளையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் தேவையானவற்றை மட்டும் ஆராய்ந்து தேடினோம் வெற்றி கிட்டிவிட்டது என்கிறார்கள்.

சரி இவ்வளவு காசு கிடைத்துள்ளது, அதவச்சு என்ன பண்ணபோறீங்கன்னு கேட்க, “சிம்பிள் எல்லாமே investment தான்” என்கிறார்கள் இந்த அதிர்ஷ்டக்கார இளைஞர்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts