TamilSaaga

கிறங்க வைத்த குரல்.. நம்பி லாட்ஜ் சென்ற ஆசிய இளைஞரை நிர்வாணமாக்கி வாழ்க்கையை சீரழித்த 3 பெண்கள்.. வெளிநாட்டு ஊழியர்களே உஷார் – சிக்கினால் Embassy-யும் கைக்கொடுக்காது

இந்த டிஜிட்டல் உலகில் இணைய வழியில் நடத்தப்படும் மோசடிகளுக்கு ஆண் பெண் என்ற பேதமில்லை என்ற அளவிற்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் மோசடிகளில் ஈடுபடுகின்றனர் அல்லது ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த வகையில் துபாயில் வேலை செய்து வரும் ஆசிய ஆண்மகன் ஒருவரை மூன்று பெண்கள் திட்டமிட்டு மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு பெண் தன்னை ஐரோப்பாவை சேர்ந்த ஒரு பெண்ணைப்போல கட்டிக்கொண்டு அந்த ஆசியா இளைஞருடன் WhatsApp மூலம் அடிக்கடி உரையாடிவந்துள்ளார்.

இந்தியர்களே… சிங்கப்பூருக்கு கிளம்ப தயாராகுங்க… 11 ஆண்டுகளில் இல்லாத “உச்சபட்ச” வேலைவாய்ப்பு- வேலை தேடுவோருக்கு காது குளிர வந்திருக்கும் ManpowerGroup சர்வே

இந்த Chatting ஒரு கட்டத்தில் Dating என்ற நிலைக்கு மாற, “சம்பவத்தன்று, இரவு உணவிற்கு நாம் இன்று சந்திக்கலாம்” என்று கூறி அந்த பெண்ணை ஒரு உணவு விடுதிக்கு அழைத்துள்ளார் அந்த நபர்.

அந்த ஆப்பிரிக்க பெண் தனது தோழிகளையும் அந்த இடத்திற்கு வரச்சொல்லி அந்த இளைஞரிடம் இருந்து பணம் பறிக்க திட்டம் தீட்டியுள்ளார். இதை அறியாத அந்த நபர் பொறியில் மாட்டிய எலியை போல அந்த பெண்களிடம் சிக்க, வலுவான அந்த பெண்கள் இவரை மிரட்டி 120 திர்ஹம் பணம் மற்றும் அவரது கிரெடிட் கார்டு ஆகியவற்றை திருடியுள்ளனர். மேலும் தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி அதிக அளவில் பணமெடுக்க திட்டம் தீட்டியதாகவும், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் தன்னை கொன்றுவிடுவதாக அப்பெண்கள் மிரட்டியதாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதுபோதாதென்று எதிர்காலத்தில் அவரை மிரட்டி மேலும் பணம் பறிக்க எண்ணி அந்த நபரின் ஆடைகளை கழட்டி நிர்வாணப்படுத்தி அதை வீடியோ எடுத்துள்ளனர். பிறகு அந்த மூன்று பெண்களுக்கு வெவ்வேறு டாக்ஸிகளில் ஏறி தப்பியதாக போலீசாரிடம் கூறினார் அந்த இளைஞர். இறுதியில் இந்த செய்தி அருகில் இருந்த காவல்நிலையங்களுக்கு அனுப்பப்பட, வெகு சில மணி நேரத்தில் அந்த மூன்று பெண்களையும் கையும் களவுமாக துபாய் போலீசார் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் 2 இளைஞர்களுக்கு கூரையை பிச்சுக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. அதுவும் இரண்டு முறை – திறமைக்கார பசங்கதான்!

துபாயில் உள்ள அந்த ஆசிய நாட்டவரிடம் கொள்ளையடித்த குற்றத்திற்காக அந்த பெண்களுக்கு 28,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புது இடங்களுக்கு செல்லும்போது அனைத்து விதங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கு நினைவுவில்கொள்ளவேண்டும். இதுபோன்ற விஷயங்களில் தானே சென்று சிக்கினால் உங்கள் நாட்டின் தூதரகம் கூட உங்களுக்கு உதவிக்கு வருவது கடினம் தான். நீங்கள் வேலை தேடி சென்ற உங்களை காக்கும் என்றாலும் நாமும் விழிப்போடு இருப்பது சிறந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts