சொந்த பந்தங்களை விட்டு சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆறுதல் என்றால் தங்களுடன் பணி புரியும் வெளிநாட்டு ஊழியர் தான். குடும்பத்தை பற்றிய நினைப்பு வரும் பொழுதெல்லாம் மாறி மாறி சோகத்தை பகிர்ந்து ஆறுதல் அடைந்து கொண்டு தங்களது நாட்களை கடத்திக் கொள்வர்.அப்படி பணி புரியும் வெளிநாட்டவர்களுக்கு உதவி புரிவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் வெளிநாட்டு ஊழியர் சங்கம்.
தங்குமிடங்களில் பிரச்சனை, வேலை செய்யும் இடங்களில் பிரச்சனை போன்ற சமயங்களில் வெளிநாட்டு ஊழியர் சங்கம் ஆனது தொழிலாளர்களுக்கு ஓடோடி உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. எனவே இந்த சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் பொருட்டு லிட்டில் இந்தியா பகுதியில் அனைத்து உலக ஊழியர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் பணிபுரியும் பல வெளிநாட்டு ஊழியர்களும் கொண்டனர்.
இது குறித்து 12 ஆண்டுகள் சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஆன செல்வராசு கூறும்பொழுது “12 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலாக சிங்கப்பூருக்கு வந்த பொழுது, செய்வதறியாமல் திகைத்தபொழுது இந்த வெளிநாட்டு ஊழியர் தங்களுக்கு மிகவும் உதவி புரிந்ததாக தெரிவித்தார்”. இந்த சங்கத்தின் மூலம் உதவி பெற்ற பலரும் சங்கத்தின் பெருமையை குறித்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ்,சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கு பெற்ற ஊழியர்களுக்கு உணவுப் பொருட்களும்,அன்பளிப்பு பைகளும் வழங்கப்பட்டன. மேலும் தொழிலாளர்கள் உடலை பரிசோதனை செய்துகொள்ள உடல்நல பரிசோதனை கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.