சிங்கப்பூர் முழுவதும் தற்போது கிருமி தொற்றுடன் தொடர்புடைய மேலும் 12 சந்தைகள் மற்றும் உணவு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று காலை (ஜூலை 18) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜுராங் துறைமுகத்தில் உள்ள மீன் கடை ஸ்டால்களில் இருந்தே தொற்று அதிக அளவில் பிற இடங்களுக்கு பரவியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வெள்ளியன்று, துறைமுகம் மற்றும் ஹாங் லிம் சந்தை மற்றும் உணவு மையத்தில் ஒரு தொற்று சம்பவம் காணப்பட்டது. இது அந்த மொத்த சந்தை மற்றும் உணவு மையங்களின் மூலம் உருவான தெற்று எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தியுள்ளது.
சிங்கப்பூரை பொறுத்தவரை KTV கிளஸ்ட்டர் குழுமம் மூலம் அதிக அளவில் தற்போது தொற்று பரவி வருகின்றது. இதனையடுத்து சிங்கப்பூரில் பல தடைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உணவகங்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே 5 பேர் கொண்ட குழுவாக அமர்ந்து உணவு உண்ண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.