TamilSaaga

சிங்கப்பூரில் உலக இளம் தலைவர்களுக்கான வருடாந்திர மாநாடு – 2,50,000 வெள்ளி மானியம் அறிவிப்பு

சிங்கப்பூரில் தற்போது தற்கொலை தடுப்பு, சுற்றுச்சூழல் நிலைபாடு மற்றும் மனநலம் ஆகிய பணிகளுக்காக தங்களுடைய முயற்சிகளை முன்னெடுத்து நடத்துவோர் தங்களுடைய திட்டங்களுக்கு உதவும் வகையில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மானியத்தை இப்போது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் சுமார் 1,000 வெள்ளி முதல் 3,000 வெள்ளி வரை இந்த மானியம் கிடைப்பதற்காக வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நேற்று இணைய வழியில் நடந்த உலக இளம் தலைவர்களுக்கான வருடாந்திர உச்சநிலை மாநாட்டில் இந்த நிதி குறித்த உதவி பற்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மானியத்தை இன்­னோ­டி­ரக் என்கின்ற வெளிப்புற போதனை நிறுவனமானது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த இந்த உச்சநிலை மாநாட்டில் சுமார் 77 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கு கொண்டனர்.

மேலும் இந்த குறித்த தகவல்களுக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு www.characterleadership.sg/impact-to-the-community என்று இணையத்தை நாடலாம்.

Related posts