TamilSaaga

சிங்கப்பூர் சோங் பூன் மார்க்கெட் – தூய்மைப்படுத்தும் பணிக்காக 14 நாட்கள் மூடல்

சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (ஜூலை 17) நண்பகல் நிலவரப்படி உள்நாட்டில் புதிதாக 60 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 29 கேடிவி கிளஸ்டரைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கேடிவி கிளஸ்ட்டர் மூலம் மொத்தம் 148 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவான 60 புதிய வழக்குகளில் 33 வழக்குகள் முந்தைய வழக்குகளுடன் தொடர்புடையவை, அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜுராங் மீன்வள துறைமுகத்திற்கு வருகை தந்த மீன் பிடிப்பவர்களால் தொற்று அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சோங் பூன் மார்க்கெட் மற்றும் உணவு மையத்திலும் சில தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில் தூய்மை பணிக்காக தற்போது Chong Boon Market & Food Centre மூடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பூட்டுதலானது இன்று ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts