TamilSaaga

சிங்கப்பூர் மற்றும் மலேசியா செல்ல பயணிகள் இனி விமானங்களுக்கு காத்திருக்க தேவையில்லை..அக்டோபர் 29 முதல் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதலாக 31 விமான சேவைகள்…

அக்டோபர் 29ஆம் தேதி முதல் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதலாக 31 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் பயணிகளை கையாள்வதில் திருச்சி விமான நிலையம் ஆனது 11 வது இடத்தை பெற்றுள்ளது மேலும் வளர்ந்து வரும் விமான நிலையங்களின் பட்டியலில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. தற்பொழுது திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தின் கீழ் 930 கோடி பட்ஜெட்டில் புதிய முனையமானது கட்டப்பட்டு வருகின்றது.

கடந்த நிதியாண்டில் திருச்சி விமான நிலையம் சுமார் 31 கோடி லாபம் ஏற்றியுள்ளதால் அதை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் கூடுதல் விமான சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி அக்டோபர் 29ஆம் தேதிக்கு மேல் வெளியிடப்படும் குளிர் கால அட்டவணையின் கீழ் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திருச்சியில் இருந்து தினமும் சிங்கப்பூருக்கு நான்கு விமானங்கள், மலேசியாவுக்கு மூன்று விமானங்கள் மற்றும் கொழும்பு சார்ஜா துபாய்க்கு தலா ஒரு விமானங்கள் என மொத்தம் பத்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்பொழுது வாரத்திற்கு 76 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், சேவைகள் அதிகரிக்கப்பட்டால் 107 ஆக உயர வாய்ப்புள்ளது. தற்பொழுது திருச்சியில் இருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு செல்லும் பயணிகள் டிக்கட் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகின்றது. மலேசியாவிற்கு செல்லும் பயணிகளும் டிக்கெட் ஒரு வாரம் காத்திருப்பதால், இந்த அதிகரிக்கப்பட்ட சேவையானது அவர்களுக்கு பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே திருச்சி விமான நிலையத்தின் வளர்ச்சியும் இரு மடங்காக அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: வெளிநாடு செல்வதற்கு நம்பகமான விலையில் மற்றும் விரைவான நேரத்தில் டிக்கெட் புக் செய்வதற்கு நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி விமான நிலையம், திருச்சி – 622007. PH No.9791477360.

Related posts