TamilSaaga

சிங்கப்பூருக்கு திரும்பியது RSAF டேங்கர் – 2000 ஆப்கான் பயணிகள் மீட்பு

சிங்கப்பூர் குடியரசு விமானப்படை (ஆர்எஸ்ஏஎஃப்) டேங்கர்-டிரான்ஸ்போர்ட் விமானம் ஆப்கானியர்களை வெளியேற்ற உதவுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தது. தற்போது அதன் மனிதாபிமான பணியை முடித்துக்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை (செப் 10) சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்பியது.

RSAF A330 மல்டி ரோல் டேங்கர் டிரான்ஸ்போர்ட் (MRTT) ஜெர்மனியில் இருந்து வெளியேறுவோருக்கு உதவ கத்தார் அல் அல் உதீத் விமான தளத்திற்கு அனுப்பப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) தனது செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களில் SAF 2,000 க்கும் மேற்பட்ட மக்களை கொண்டு சென்றது.

266 பயணிகள் அல்லது 37,000 கிலோ சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடிய MRTT, உடல்நலம் சரியில்லாதவர்கள் அல்லது காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பணிக்காக விமானிகள், விமானப்படை மற்றும் பொறியாளர்கள் உட்பட மொத்தம் 77 சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் (SAF) பணியமர்த்தப்பட்டனர்.ல் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts