உலக அளவில் உள்ள நிறுவனங்கள் பல்வேறு தொழில் யுக்திகளை கையாண்டு தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் ஒரு சிறிய ஓட்டல் நடத்தும் நிறுவனம் ஒன்று அவர்களின் பானங்களால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், Thai Milk Tea, கிரீன் டீ மற்றும் சோடா போன்ற பானங்களை எப்படிப் பையில் அடைக்கிறார்கள் என்பதை பார்த்தால் சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. இந்த Phallic வகை பைகளின் உள்ள பானங்களின் புகைப்படங்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
தங்கள் வியாபாரத்தை பெருக்க ஒரு வித்தியாசமான விஷயத்தை கையாண்டுள்ள இந்த நிறுவனம் தெற்கு தாய்லாந்தில் செயல்பட்டு வருகின்றது. உள்ளூர் ஊடகமொன்று அளித்த தகவலின்படி இந்த நிறுவனம் வெளியிட்ட ஒரு பதிவில் “தயவுசெய்து இதை ரொம்ப நேர உற்றுப்பார்க்காதீர்கள்.. உங்களால் அதை தாங்க முடியாது. தயவுசெய்து இதை ரொம்ப சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சிரித்து மகிழ்திருங்கள்” நிச்சயம் இந்த பை உங்கள் கையில் இருந்தால் மக்கள் உங்களை முறைக்கத்தான் செய்வதர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், சுமார் 30,000 க்கும் அதிகமான shareகளைப் பெற்று, வைரலான பிறகு, அந்த கடை தனது பதிவை நீக்கியுள்ளது. மேலும் “இது பல முக்கியமான சிக்கல்களை உள்ளடக்கியது” என்பதால், ஃபாலிக் பைகளில் பானங்கள் விற்பனை செய்வதை நிறுத்துவதாகவும் அது அறிவித்துள்ளது.
மேலும் அவர்கள் வெளியிட்ட ஒரு பதிவில் “அனைத்து வாடிக்கையாளர்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.. இனி (ஆணுறுப்பு வடிவிலான) பையை விற்க மாட்டோம். இது பல முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியது. உங்கள் ஆர்வத்திற்கும் ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளது.
வியாபார நோக்கத்திற்காக செய்யப்படுவது என்றாலும் சில சமயங்களில் மக்களின் வெறுப்பை சம்பாரிக்கும் வகையில் நடந்துகொள்வது சற்று முகம்சுளிக்க வைக்கிறது.