TamilSaaga

தொற்று அதிகமுள்ள நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு உடல்நல மதிப்பீடு – சாங்கி விமான நிலையத்தில் ஏற்பாடு

கொரோனா தொற்று அதிகமுள்ள நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு சாங்கி விமானநிலைய 4வது முனையத்தில் மதிப்பீடு செய்ய ஏற்பாடு செய்யலாம் என போக்குவரத்து அமைச்சர் திரு.ஈஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த பரிசோதனைகள் எல்லாம் தற்போது விமானநிலைய இரண்டாவது முனையத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த முனையத்தில் தனிமைப்படுத்தும் நடைமுறைகள் நடைபெறுவதால் அதன் காரணமாக இந்த வெளிநாட்டு பயணிகள் உடல்நல மதிப்பீட்டை செய்ய 4 வது முனையத்தை பயன்படுத்தலாம் என கூறியுள்ளார்.

விமான புறப்பாடு மற்றும் வருகைப் பதிவு போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த கொரோனா பரிசோதனைகள் செய்யும் பணியில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பினை பொறுத்தவரை சுமார் 95% சதவீதம் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

எனவே பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மதிப்பீடும், பணியாளர்கள் பாதுகாப்பாகவும் செயல்படுவது அவசியம் என அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts