TamilSaaga

தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை மாஸாக உலகிற்கு அறிமுகப்படுத்திய நயன்தாரா… ஒரே நாளில் உலக அளவில் ட்ரெண்டான வீடியோ!

சினிமா உலகில் திடீரென்று ஏதாவது ஒரு வீடியோ வைரல் ஆவது வழக்கம். சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் என்றால் அதற்கு சொல்லவே தேவை இல்லை. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பெயருடன் வலம் வருபவர் நயன்தாரா. அவர் திருமணம் ஆன முதல், குழந்தை பெற்றது வரை ஒவ்வொரு செய்தியும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற சம்பவம் சில நாட்களாக பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது.

திருமணமான ஒரு வருடத்தில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்ற நிலையில் இவர்களால் மட்டும் எப்படி முடியும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் முறையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தங்கள் மீது குற்றமில்லை என்பதை நிரூபித்தனர்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தாங்கள் பெற்ற இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோரின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். குழந்தைகளின் முகத்தை மறைத்தே இதுவரை புகைப்படத்தை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இரட்டைக் குழந்தைகளின் முகத்தை முதன்முதலாக சமூக ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதுவரை இன்ஸ்டாகிராமில் இணையாத இவர் இந்த வீடியோவின் மூலம் முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இந்த வீடியோ தான் தற்பொழுது தமிழ்நாட்டின் பிரண்ட் ஆகி வருகின்றது.

Related posts