TamilSaaga

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் முக்கிய அறிவிப்புகள்… செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

செப்டம்பர் 1 முதல் பல்வேறு புதிய நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அவற்றையெல்லாம் நாம் தனித்தனியாக செய்திகளாக வெளியிட்டு இருந்தோம். அவற்றில் சில முக்கியமான செய்திகள், சிங்கப்பூரில் வேலைக்கு வர இருப்பவர்களுக்கும் சிங்கப்பூரில் ஏற்கனவே வேலை செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். அவை அனைத்தும் மொத்தமாக உங்களின் பார்வைக்காக:

சிங்கப்பூரில் S-PASSல் வேலை செய்பவர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு:

சிங்கப்பூரில் S-PASSல் பணிபுரிபவர்களுக்கு செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு அடிப்படை சம்பளம் ஆனது ஏற்கனவே உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், செப்டம்பர் 2023 முதல் அடிப்படை சம்பளத்தை திரும்பவும் உயர்த்துவதாக அரசு அறிவித்திருந்தது. எனவே, S பாசில் பணிபுரிபவர்களின் அடிப்படை சம்பளம் 3000 வெளியிலிருந்து 3150 வெளிவர உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒர்க் பெர்மீட்டின் கீழ் வேலைக்கு வருவோருக்கான புதிய நிபந்தனை:

செப்டம்பர் 1 முதல் வொர்க் பெர்மீட்டின் கீழ் வேலைக்கு வர வேண்டும் என்றால், விண்ணப்பிப்பவர்களின் கல்வி சான்றிதழ் அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனங்களால் சரிபார்க்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,அந்த விதியானது இன்று முதல் அமலுக்கு வருகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு திட்டமானது மார்ச் மாதமே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். இதற்காக பிரத்தியேகமாக 12 நிறுவனங்களை MOM நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு 30 முதல் 60 சிங்கப்பூர் டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒர்க் பெர்மீட்டின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட துறைகள்:

சிங்கப்பூரில் இதுவரை ஏழு துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே பெர்மிட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள், லக்கேஜ் தூக்குபவர்கள், ஹோட்டல் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட துறைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதால் சிங்கப்பூர் அரசனது விதிகளை தளர்த்துவதாக அறிவித்திருந்தது. இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் சிங்கப்பூரில் இந்த ஆண்டு வேலைக்கு வர வாய்ப்புள்ளது.

Related posts