TamilSaaga

சிங்கப்பூருக்கு TWP பாஸில் கிளம்ப இருக்கீங்களா… வொர்க் பெர்மிட்டிக்கு மாற முடியுமானு குழப்பமா இருக்கா? இதோ இருக்கு உங்க கேள்விக்கான மொத்த விடை!

வெளிநாட்டு வேலைக்கு செல்ல நினைப்பவர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடமே சிங்கப்பூருக்கு தான் இருக்கும். இங்கு வாய்ப்புகள் ஏராளமாக இருந்து கொண்டே இருக்கும். வேலைக்காக வருபவர்களை போல பயிற்சிக்காக சிங்கப்பூர் வந்து அதன்பின் வேலையில் செட்டில் ஆகுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் student விசாவில் மட்டுமல்லாமல் TWPல் வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் TWP பாஸிற்கு அப்ளே செய்யும் போது MOM உங்களின் சில தகுதிகளை செக் செய்யும் அதுகுறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

TWP என்பது சிங்கப்பூரில் வேலை செய்ய கொடுக்கப்படும் ஒரு வகை பாஸ். இதில் வேலைக்கு வருபவர்களால் 6 மாதம் மட்டுமே சிங்கப்பூரில் இருக்க முடியும். உங்கள் கம்பெனி உங்களின் வேலை பிடித்து இருந்தால் வொர்க் பெர்மிட்டுக்கு கூட மாற்றிக்கொள்வார்கள். ஆனாலும், அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதற்கு முன்னர் TWP ஓகே செய்வதற்கே சிலவற்றை செக் செய்து தான் தரப்படும்.

முதலில் ஊழியரின் படிப்பினை MOM அதிகமாக கருத்தில் கொள்ளும். மேற்படிப்பை படித்திருப்பவர்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் நீங்க படித்த கல்லூரி அங்கீகரிக்கப்பட்டதா என்பதையும் பார்க்கும். அப்படி இல்லையென்றால் உங்களின் பாஸ் அப்ரூவ் ஆவது கடினமாக பார்க்கப்படும்.

முக்கியமாக உங்களின் தனிப்பட்ட தகவல்களும் விசாரிக்கப்படும். க்ரிமினல் பேக்ரவுண்ட் இருப்பவர்களின் விண்ணப்பத்தினை MOM ஓகே செய்யாமல் இருப்பது போல உங்களின் தனிப்பட்ட குணங்கள் கூட இதில் அதிகம் ஆராயப்படும்.

MOM விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது வயது மற்றும் திறன் குறித்தும் முக்கியமாக பார்க்கப்படும். மாணவர்கள் மற்றும் அனுபவமற்ற பயிற்சியாளர்கள் குறிப்பிட்ட துறையில் கற்றுக்கொள்ள கொடுக்கப்படுவதே TWP. பயிற்சி பெறுபவர் வயது அடிப்படையில் வயதானவராக இருந்தால் அது ஒரு பிரச்னையாக இருக்கும்.

MOM இல் Training Work Permitல் ஒதுக்கப்படும் கோட்டாவின் அளவு, அந்த நேரத்தில் நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் துறைக்கு தான் இருக்கும். Training Work Permit பிரிவின் கீழ், construction, manufacturing, marine shipyard, process மற்றும் service உள்ளன.

பெரிய நிறுவனங்களின் TWP விண்ணப்பித்த ஊழியர்களை நிராகரிக்க விரும்பினால், MOM அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், சிங்கப்பூரில் TWP என்பது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு திட்டமாகும். மேலும் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு மீண்டும் முழுநேர வேலை செய்ய தூண்டுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts