சிங்கப்பூரில் வேலை வாங்கி தருகிறேன் என பல ஏஜெண்ட்டுகள் பலரையும் ஏமாற்றி லட்சத்தில் கொள்ளை அடித்து வருகிறார்கள். இந்த செய்தி அடிக்கடி நம்மிடம் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஏஜென்ட்கள் என்றாலே தப்பானவர்கள் இல்லை. எல்லா தொழில் போல இதில் சில ஏமாற்று பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்படி ஏஜென்ட்கள் தான் ஏமாற்றுகின்றனர் என்றால் இப்போது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் ஒன்று யாரையுமே நம்ப முடியாதப்படி செய்து இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த 28 வயது இளைஞர் சாம்சன். இவர் வேலை இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு வந்து இருக்கிறார். ஏகப்பட்ட இடத்தில் வேலை தேடியும் அவருக்கு கிடைக்கவே இல்லை.
அப்போது அவருடன் படித்த சென்னையை சேர்ந்த முஜிபுர் ரஹ்மானிடம் பேசி இருக்கிறார். அவர் தான் சிங்கப்பூரில் கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறார். வேலையே கிடைக்காத விரகத்தியில் இருந்த சாம்சனுக்கு இது சாத்தியமா என்பது எல்லாம் யோசிக்கவில்லை. நண்பர் என்ற தைரியத்தில் அவர் கேட்ட காசினை கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: வைரலாகும் சிங்கப்பூர் ரயில்… குடியிருப்பை க்ராஸ் செய்யும் போது உருவாகும் Mist… ஆனால் இந்த ரயிலில் இருக்கும் இன்னொரு ஸ்பெஷல் தெரியுமா?
1.75 லட்ச ரூபாய் கொடுத்தும் வேலை கிடைக்காமல் தொடர்ந்து இருந்த சாம்சன், ரஹ்மானிடன் எப்போது தனக்கு விசா வரும் எனக் கேட்டுக்கொண்டே இருந்து இருக்கிறார். கொரோனா காலம் என்பதால் லேட்டாவதாக சொல்ல அதையும் நம்பி இருக்கிறார். லாக்டவுன் முடிந்தும் வேலை கிடைக்காததால் நண்பர் தன்னை ஏமாற்றி விட்டதாக உணர்ந்தவர் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறார்.
சென்னையில் இருந்த முஜிபுர் ரஹ்மானை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இவர் சாம்சனிடம் மட்டும் இல்லாமல் பலரிடமும் ஏமாற்றி ஏகப்பட்ட லட்சத்தினை சுருட்டியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாகர்கோவில் காவல்துறை கூறும்போது, இதைப்போன்ற ஆன்லைன் மோசடியில் சிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறோம். இருந்தும் சிலர் சம்பள ஆசையில் இதைப்போன்று ஏமாற்று வலையில் சிக்கி கொள்கின்றனர். இனியாவது யாரையும் இப்படி நம்ப வேண்டாம். எப்போதுமே தீர விசாரித்து ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்றனர்.