TamilSaaga

தமிழ்நாட்டின் கிராம ’ஸ்பெஷல்’ உணவுகள் சிங்கப்பூரில்… லிட்டில் இந்தியாவையே மயக்கும் மணம்… சிங்கை தமிழர்களுக்கு அம்மாவான ஆச்சி ஆப்பக்கடை

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் தமிழகத்தினை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் பெரிய கவலையே சொந்த நாட்டு உணவுகளை மிஸ் செய்வதாக தான் இருக்கும். நம்மூர் சுவையில் சாப்பாடு என்றால் யாரும் நோ சொல்ல மாட்டார்கள் தானே. அதை தான் இந்த கடையும் செய்து வருகிறது.

எலுமிச்சை சாதம் உள்ளிட்ட ஏகப்பட்ட வெரைட்டி ரைஸ்கள். சுழியம், போளி உள்ளிட்ட கிராமத்து ஸ்டைல் ஸ்வீட்கள். கூழ் முதல் சக்கரை பொங்கல் வரை கிராமத்து ஸ்டைலில் இருக்கும் எல்லா உணவுகளையுமே ஒரே கடையில் வைத்திருக்கிறது.

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற கடை தான் ஆச்சி ஆப்பக்கடை. எப்போதுமே கூட்டம் கலைக்கட்டும் இந்த கடை தென்னிந்திய உணவுகளுக்கு மட்டுமே ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 2023ம் ஆண்டின் பொது விடுமுறை தினங்கள் என்னென்ன? முழு பட்டியலினை தெரிந்துக்கணுமா இத படிங்க

9 வருஷமாக இருக்கும் இந்த கடையில் கலவை சாதம் முதல் தமிழக கிராமத்தின் அக்மார்க் ஸ்வீட்கள் அனைத்துமே செய்யப்பட்டு வருகிறது. இந்த கடையின் ஹைலைட்டே ஆப்பம் தானாம். இதிலேயே ஏகப்பட்ட வெரைட்டிகள் தருவதாகவும் கூறப்படுகிறது. காலை 5.30 மணிக்கு திறக்கப்படும் கடை இரவு 9 மணி வரை செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

முக்கியமாக இந்த கடையில் செய்யப்படும் உணவுகள் அனைத்துமே எந்தவித கெமிக்கலும் இல்லாமல் கைப்பட தயாரிப்பதாக கூறப்படுகிறது. தினம் தினம் சிங்கப்பூரில் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் ஸ்பெஷல் உணவினை சாப்பிட கூட்டம் எப்போதுமே அலைமோதும் எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts