இனி சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் ஆண் நண்பர்கள் அல்லது தோழிகள், குடும்ப உறவுகள் (FTL) (Familial ties lane) என்ற வகையின் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான அனுமதி இனி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள நிரந்தவாசிகள் மற்றும் குடிமக்களின் குடும்ப உறவுகள் என்ற வகையின் கீழ் அவர்களுடைய ஆண் நண்பர்கள்,மற்றும் தோழிகள் சிங்கப்பூர் வருவதற்கு அனுமதி இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது.
KTV கிளஸ்டரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட COVID-19 வழக்கு, வியட்நாமிய குறுகிய கால வருகை பாஸ் வைத்திருந்தவர் மூலம் பரவியது என்றும், பிப்ரவரி மாதம் குடும்ப உறவுகள் லேன் வழியாக சிங்கப்பூருக்குள் அவர் நுழைந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்று எண்ணிக்கை மீண்டும் சிங்கப்பூரில் உயராமல் இருக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.