TamilSaaga

கதவுகளை மூடும் சிங்கப்பூர் Bedok Newater Visitor Centre! ஜூலை 31 வரை தான் Visiting Time!

Newater Visitor Centre என்பது சிங்கப்பூர் Bedok-ல் செயல்படும் குடிநீர் மறுசுழற்சி மையம் ஆகும். சிங்கப்பூர் ஒரு தீவு நாடு என்பதால் அங்கு சுத்தமான நீருக்கான இயற்கை ஆதாரங்கள் மிகவும் குறைவு. எனவே பயன்படுத்திய நீரை மறுசுழற்சி மூலம் சுத்தம் செய்து, மக்களுக்கு வழங்குவதே இந்த ஆலையின் வேலை ஆகும். 2003-ல் தொடங்கப்பட்ட இதன் செயல்பாடுகள் இன்று வரை நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

இது மட்டுமல்லாமல் ஏறத்தாழ 1.7 மில்லியன் மக்கள் இந்த ஆலைக்கு சென்று அதன் செயல்பாடுகளைக் குறித்து அறிந்து கொண்டுள்ளனர். தண்ணீர் மறுசுழற்சி எந்த அளவில் மக்களுக்கு முக்கியம் என்பதைக் குறித்த விழிப்புணர்வை ஏறத்தாழ 20 வருடங்களாக ஏற்படுத்திக் கொண்டிருந்த Newater Visitor Centre வருகிற ஜூலை 31 முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக PUB தெரிவித்துள்ளது. 

இந்த மறுசுழற்சி மையம் தனது ஆயுற்காலத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மறுசுழற்சி மையம் சாங்கி பகுதியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அது 2026-ல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தண்ணீர் தட்டுபட்டைத் தவிர்க்க மறுசுழற்சி நீரைப் பயன்படுத்துவது குறித்து 1970-ல் PUB திட்டமிட்டது. 1972-ல் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு PUB மற்றும் அப்பொழுது Ministry of the Environment (ENV) என்ற பெயரில் செயல்பட்டு வந்த Ministry of Sustainability and the Environment அமைச்சரவையும் இணைந்து இதனை செயல்படுத்தியது. பிறகு 2000-ம் ஆண்டு Newater மாதிரி உருவாக்கப்பட்டு 2000 முதல் 2002 வரை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு 2003-ல் செயல்பாட்டிற்கு வந்தது. 

சோதனைகளில் Newater Plant-ல் மறுசுழற்சி செய்யப்படும் குடிநீர் உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளினால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே இது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் உள்ள நிபுணர்களால் இந்த Plant சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இங்கு மறுசுழற்சி செய்யப்படும் நீர் குடிநீராக பயன்படுத்த உகந்ததாக இருப்பினும் நேரடியாக அதனை குடிநீராக பயன்படுத்தாமல் பிற தேவைகளுக்கு பயன்படுத்த அவர்கள் பரிந்துரை செய்தனர். 

மறுசுழற்சி நீரை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க முதலில் அவர்களுக்கு அதனைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 2002-ல் பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பிரச்சாரங்களில் இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். 

மேலும் 2002-ம் ஆண்டு தேசிய தினத்தன்று, அப்போதைய சிங்கப்பூர் அதிபரும் அவருடன் இணைந்து 60,000 மக்களும் அருந்த இந்த Newater சிஸ்டம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 

அப்பொழுதிருந்து மக்களுக்கு இந்த Newater குறித்தும், மறுசுழற்சி நீர் எப்படி மாசுக்கள் நீக்கி தூய்மையாக மாற்றப்படுகிறது என்பதைக் குறித்தும் PUB எடுத்துரைத்து வருகிறது. 

20 வருடமாக செயல்பட்டு வந்த Bedok Newater Visitors Centre இப்பொழுது நிரந்தரமாக மூடப்படுவதால் விருப்பமுள்ளோர் BookingSG-ல் தங்களுக்கான நேரத்தை புக் செய்து ஜூலை 31-க்குள் சென்று பார்வையிடலாம். 

செவ்வாய் முதல் ஞாயிறு வரை அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை Visitors Centre மக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts