தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு செல்பவர்கள் சம்பாதிக்க மட்டுமே செல்கின்றார்கள் என்று தான் நாம் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருப்போம்.
ஆனால் அந்த சிந்தனையை மாற்றி “சம்பாதிக்க மட்டுமல்லாமல், எங்களால் சாதிக்கவும் முடியும்” என்று நிரூபித்து காட்டி இருக்கின்றனர் சிங்கப்பூர்வாழ் தமிழர்கள்.
ஆம்! நாம் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை நம் ஊர்களில் கிராமங்களில் திருவிழாவின்போது அவ்வப்போது காண்பது வழக்கம். தற்பொழுது, நகர வாழ்க்கையின் காரணமாக கபடி என்பதே பலருக்கு மறந்திருக்கும்.
இந்நிலையில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நம் பாரம்பரிய போட்டியான கபடி போட்டியினை பிரம்மாண்டமாக நடத்தி சாதனை புரிந்துள்ளனர்.
இந்த மாபெரும் போட்டியினை Love and Comfort Organization and AGWO நிறுவனர் திரு.பிரவீன் அவர்கள் நடத்திக் கொடுத்துள்ளார். மேலும் “சிங்கப்பூர் கபடி போட்டியின் நடுவர் குழு” இவர்களுக்கு துணையாக நின்று போட்டி நன்முறையில் நிறைவு பெற உறுதுணையாக இருந்துள்ளனர்.

48 குழுவினர் பங்கேற்ற இந்த போட்டியில் இறுதியாக 4 குழுவினருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. பரிசு கோப்பையினை வீரர்கள் பெற்று கம்பீரமாக நிற்கும் புகைப்படத்தொகுப்பு உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.




நம் பாரம்பரிய விளையாட்டினை கடல் கடந்து, சிங்கப்பூரில் நிலை நாட்ட போட்டியில் பங்கு பெற்ற 48 குழுவினர்களுக்கும் “தமிழ் சாகா சிங்கப்பூரின்” சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்!