அமெரிக்கா கடந்த திங்களன்று (அக்டோபர் 18) சிங்கப்பூருக்கான தனது பெருந்தொற்று தடுப்பு பயண ஆலோசனை அளவை அதிக ஆபத்து வகைக்கு உயர்த்தியுள்ளது. மேலும் அமெரிக்காவில் இருந்து பார்வையாளர்கள் சிங்கப்பூர் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (CDC) சிங்கப்பூருக்கான தனது நிலையை 4 வது நிலைக்கு மாற்றியுள்ளது. இது பெருந்தொற்று அபாய நிலையின் “மிக உயர்ந்த நிலையை” குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“சிங்கப்பூரில் தற்போதைய பெருந்தொற்று நிலைமை காரணமாக, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட பெருந்தொற்றை பெறுவதற்கும், அதை பரப்புவதற்கும் வாய்ப்பும் ஆபத்தும் இருக்கலாம்” என்று CDC தெரிவித்துள்ளது. VTL முரையில் சிங்கப்பூர் வர அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் செல்ல வேண்டியவர்கள் அவசிய உள்ளவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்றும்.
அவர்கள் நாட்டின் அமெரிக்க வழங்கும் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்றும், முகமூடி அணிவது மற்றும் பாதுகாப்பான தொலைதூர நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை உறுதிசெய்யவேண்டும் என்றும் அமெரிக்காவின் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெருந்தொற்று காரணமாக சிங்கப்பூர் செல்ல வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை திங்கள்கிழமை இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் உள்ள சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்து பயணிகளை எச்சரிக்க நான்கு நிலை ஆலோசனை அமைப்பு மூலம் பயண சுகாதார அறிவிப்புகளை CDC பயன்படுத்துகிறது.
சமீபத்திய பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் புதிய வழக்குகளின் அதிகரிப்பு போன்ற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த CDC அமைப்பு அதற்கான இலக்குகளை வகைப்படுத்துகிறது என்பது நினைவுகூரத்தக்கது.