TamilSaaga

சூடு பிடிக்கும் தேர்தல் களம்… எதிர்க்கட்சி வேட்பாளரிடமே “தான் சரியான அதிபர்” என பெயர் வாங்கிய தர்மன் சண்முகரத்தினம்…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுக்கு தகுதி சான்றிதழ் அளிக்கும் பணியானது தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது. பல்வேறு கூற்றுக்களை ஆராய்ந்து, குறிப்பிட்ட நபர் தேர்தலில் போட்டியிட தகுதியுள்ளவரா அல்லது தகுதியற்றவரா என்பதை சிங்கப்பூர் அரசு முடிவு செய்யவும். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட தகுதி சான்றிதழ் பெற்றுள்ள திரு. டான் கிங் அவர்கள் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து கூறியவர் அதிபர் தேர்தலில் எனக்கு சரியான போட்டி தர்மன் சண்முக ரத்தினம் என தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிர் வேட்பாளரான தர்மன் தேர்ந்தெடுக்கப்பட்டால் தலைசிறந்த அதிபராக செயலாற்றும் தன்மை அவருக்கு இருந்தாலும் சுதந்திரமான செயலாற்றும் தன்மை இல்லை எனக்கு குறிப்பிட்டார். திரு தர்மன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் 22 ஆண்டு காலம் பணி செய்தாலும், அவரால் இன்றைய மக்களுக்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான் என டான் கூறினார்.

மேலும், மறைமுகமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் உங்கள் எதிர்காலத்தை மாற்றக்கூடிய அதிபருக்கு வாக்களிப்பதே சிறந்தது. அதுவே இளம் வாக்காளர்களுக்கு நான் தெரிவிக்கும் என்பதை குறிப்பிட்டார். சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் எதிர் தரப்பு கட்சிகள், ஒருவருக்கொருவர் சூடான வாக்குறுதிகளை எடுத்து வைத்து உரையாற்றி வருகின்றனர். தேர்தல் பற்றி மேலும் கூறிய அவர், சிங்கப்பூரில் வாழும் நடுத்தர மக்களே என்னுடைய இலக்கு என்றும், அவர்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Related posts