TamilSaaga

இந்தியாவிற்கு போட்டியாக ரஷ்யா அனுப்பிய லூனா 25 உடைந்து நொறுங்கியது… இந்தியர்களின் கனவை சுமந்து வெற்றிகரமாக தரையிறங்குமா சந்திரயான்?

இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பியதில்லை என்ற நிலையில், புது வரலாறு படைப்பதற்காக உலகின் தென் துருவத்தை அடைய உலகின் முன்னணி நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 615 கோடி ரூபாய் செலவில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி, விண்ணில் ஏவியது. நிலவின் சுற்றுவட்ட பாதையை வெற்றிகரமாக அடைந்த விண்கலமானது, தற்பொழுது வரை திட்டமிட்டபடி செயல்பட்டு வருகின்றது.

மேலும் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டெர் தனியாக பிரிந்துள்ளது என்ற மகிழ்ச்சி செய்தினை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. மேலும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை சுமார் ஆறு மணி அளவில் நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கும் எனவும் தெரிவித்திருந்தது. இந்தியாவிற்கு போட்டியாக ரஷ்யா லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. மேலும் இந்தியாவிற்கு முன்னாலே நிலவினை அடைய வேண்டும் என்ற கணக்கில், இந்த விண்கலமானது நிலவின் சுற்றுவட்ட பாதையை வெறும் ஐந்து நாட்களில் அடையும் அளவில் தயாரிக்கப்பட்டு இருந்தது.

எனவே ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தியாவிற்கு பிறகு ஏவப்பட்ட விண்கலம் ஆகஸ்ட் 21ஆம் தேதியிலேயே தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் தரையிறங்குவதற்கான இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து விண்கலம் விழுந்து நொறுங்கியது என்ற செய்தியை ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒருவேளை திட்டமிட்டபடி விண்கலம் திறக்கப்பட்டு இருந்தால், இந்தியாவிற்கு முன்னரே நிலவின் தென் துருவத்தை அடைந்த பெருமையை ரஷ்யா பெற்றிருக்கும். தற்பொழுது தனக்கு முன்னால் இருந்த தடையை தகர்த்தெறிந்த இந்தியா, வெற்றிகரமாக விண்ணில் இறங்குமா என்ற ஆர்வம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

Related posts