TamilSaaga

சிங்கப்பூரில் மறந்தும் செய்யகூடாத 10 விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

சிங்கப்பூர் : உலகில் மற்ற நாடுகளில் இல்லாத வகையில் சிங்கப்பூரில் கலாச்சார பழக்க வழக்கங்கள், சட்ட விதிமுறைகள் முழுவதுமாக கடைபிடிக்கப்படும். ஆசியாவில் உள்ள டாப் சுற்றுலா நாடுகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இங்கு சுற்றுலா வருபவர்கள் எந்த மாதிரியான தவறுகளை தவறிக் கூட செய்து விடக் கூடாது, அப்படி செய்தால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரங்களை தெரிந்து கொண்டு உங்களின் சிங்கப்பூர் பயணத்தை திட்டமிடுவது சிறப்பானதாக இருக்கும்.

சிங்கப்பூரில் செய்யக் கூடாத 10 விஷயங்கள் :

  1. சிங்கப்பூரில் குறைந்த விலையில் நல்ல சுவையான உணவுகள் கிடைக்க சுற்றுலா பயணிிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகள் பலரும் நாடி செல்வது Hawker center களை தான். இங்கு வரும் உள்ளூர்வாசிகர் சில டேபிள்களை தங்களுக்கென பதிவு செய்து வைத்திருப்பார்கள். இதனால் இந்த டேபிள்களில் டிஸ்யூ பேப்பர்கள், தண்ணீர் பாட்டில்கள், குடைகள் போன்ற பொருட்களை போட்டு வைத்திருப்பார்கள். இவற்றை சிங்கப்பூரில் choping என்பார்கள். இப்படி choping செய்யப்பட்ட டேபிள்களை பயன்படுத்தக் கூடாது. எந்த பொருளும் வைக்கப்படாமல் காலியாக இருக்கும் டேபிளில் சென்று மட்டுமே அமர வேண்டும்.
  2. hawker center களில் பேரம் பேசக் கூடாது. இங்கு பெரும்பாலான கடைகளில் fixed rate களில் தான் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
  3. ரயில் நிலைகள் அல்லது ரயில்களுக்குள் திண்பண்டங்கள் எதுவும் சாப்பிடவோ, எதுவும் குடிக்கவோ கூடாது. இது சிங்கப்பூரில் சட்ட விரோதம் என்பதால் 500 சிங்கப்பூர் வரை அபராதம் விதிக்கப்படும். குடிக்கும் தண்ணீர்களை ரயில்களில் எடுத்து செல்வதற்கு கூட அனுமதி கிடையாது.
  4. பார்க், பீச் போன்ற பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது. இந்த சட்டம் சிங்கப்பூரில் மிக கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
  5. யாரையும் நேரடியாக கிண்டல் செய்தோ, விமர்சனம் செய்தோ, அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டியோ பேசக் கூடாது.
  6. பொது இடங்களில் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் சைகை காட்டுவது, சத்தமாக குரல் கொடுப்பது அல்லது கத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
  7. உயைராடலின் போது ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கே பேசக் கூடாது. அவர்கள் பேசி முடித்த பிறகே நாம் பேச துவங்க வேண்டும்.
  8. கோவில்களுக்கு செல்வதாக இருந்தால் செருப்புகளை கழற்றி விட்டு, கால்களை நன்கு சுத்தம் செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல வேண்டும். மற்றவர்களின் மத நம்பிக்கைகளை பாதிக்காமல் இருக்க வேண்டும். அதே போல் தரையில் அமரும் போது உங்களின் பாதங்கள் புரோகிதர் மற்றும் சுவாமி சிலைகளுக்கு நேராக இருக்கும் படி அமரக் கூடாது.
  9. சூயிங்கம், புகையிலை, எலக்ட்ரானிக் சிகரெட்கள் உள்ளிட்ட பொருட்களை சிங்கப்பூரில் தடை செய்யப்ட்டவை இவற்றை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது.
  10. தெருக்களில் எச்சில் துப்பக் கூடாது என்பது சிங்கப்பூரில் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றமாகும். இதற்கு 500 சிங்கப்பூர் டாலர்கள் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.30,740 ஆகும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts