TamilSaaga

“சிங்கப்பூரின் VTL திட்டம்” : ஜெர்மனி, புருனேயிலிருந்து வந்த 1,926 பயணிகள் – தொற்று சோதனையில் அதிர்ச்சி தகவல்

சிங்கப்பூர்-புருனே மற்றும் ஜெர்மனியில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்துதல் இல்லாத பயணத்தை செப்டம்பர் 8 தொடங்கியதிலிருந்து இதுவறை 1,926 பார்வையாளர்கள் நமது சிங்கப்பூருக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட டிராவல் லேன் (VTL) ஏற்பாடுகளின் கீழ் ஜெர்மனியில் இருந்து வந்த இருவர் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு பெருந்தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவலை சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) இன்று சனிக்கிழமை (அக்டோபர் 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஆணையம் கூறியது. புதுப்பித்தலில், குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இரு நாடுகளிலிருந்தும் சிங்கப்பூருக்குள் நுழைய அக்டோபர் 8ம் தேதி வரை மொத்தம் 4,676 VTL பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்போது அறிவிக்கப்பட்ட பயணத் திட்டத்தின் கீழ், பார்வையாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் நான்கு சுற்று PCR சோதனைகளைச் செய்ய வேண்டியிருந்தது: புறப்படுவதற்கு முன், வருகையில், அதே போல் வந்த மூன்று மற்றும் ஏழாம் நாளில் அந்த சோதனை நடத்தப்பட்டும்.

சிங்கப்பூர் CAAS, ஜெர்மனி மற்றும் புருனே ஆகிய இரு நாடுகளிலிருந்தும் வேறு எந்த நேர்மறையான வழக்குகளும் கண்டறியப்படவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related posts