தடைகளை தகர்த்து தடம் பதித்தது இந்தியா. ஆம்.. நிலவின் தென் துருவத்தில் முதலாக தரையிறங்கிய நாடு என்ற பெருமையை பெற்றது சந்திரயான்-3. இதைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் நேரலையில் பேசிய இந்தியாவின் பிரதமர், இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்று கூறினார். மேலும் இதற்காக இரவு பகலாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர முத்துவேல் அவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் நன்றிகள் கூறினார்.
முதலில் சாய்ந்த படி தரையிறங்கிய விக்ரம் லேண்டெர் பின்பு நேராக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத்தொடர்ந்து நேரலையில் அளித்த, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் உள்ளனர். அனைவரும் இனிப்புகளை பரிமாறி நாடு கடந்து இருந்தாலும் தங்கள் நாட்டு பற்றினை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.