நேற்று ஜூலை 16ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் ஓங் ஈ குங், தற்போது சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாட்டில் தற்போது இருப்பில் உள்ள ICU படுகைகளின்
எண்ணிக்கையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்திற்குள், கேடிவி குழுமங்களின் நடந்த கேளிக்கை கூடல்களின் மூலம் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது. KTV குழுமங்களுக்கு அண்மையில் சென்றவர்கள் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் பரிசோதனை செய்துகொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை சுமார் 120 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இரண்டாவது மிக பெரிய கிளஸ்டராக இது திகழ்கின்றது என்றார் அமைச்சர்.
இங்குள்ள அதிகாரிகள் மருத்துவமனைகளில் உள்ள ஐ.சி.யு திறனைக் கூர்ந்து கவனித்து வருகிறார்கள், ஏனென்றால் ஐந்து வாரங்களில் மருத்துவமனைகளில் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அமைச்சர் கூறினார்.