TamilSaaga

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 20 வருடங்களுக்குப் பிறகு நுழையும் “முதல் இந்தியர்” என்ற பெருமையைப் பெற்றார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா…

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 20 வருடங்களுக்குப் பிறகு நுழையும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. இதைத் தொடர்ந்து இவரைப் பற்றிய செய்திகள் தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இவர் மட்டுமல்லாமல் இவரை போட்டிக்கு அனுப்பி விட்டு, எளிமையாக வெளியே காத்திருக்கும் இவரது தாயின் புகைப்படமும் வைரலாகி வருகின்றது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல் சென்னுடன் நேற்றைய சுற்று ட்ராவல் முடிந்ததால், இன்றைய சுற்று மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 18 வயது நிரம்பிய தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரரான பிரக்ஞானந்தா, இறுதிப் போட்டியில் பேபியானோ கருவானாவுக்கு எதிராக போட்டியிட்டு 1-1 என்ற கணக்கில் சமன் செய்து, பின்பு 4 டைப்ரைக்கரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரை எதிர் கொள்ள உள்ளதால், 20 வருடங்கள் கழித்து செஸ் உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையையும், அதே நேரம் மிகக் குறைந்த வயதுடைய வீரர் என்ற பெருமையையும் ஒன்றாகப் பெற்றுள்ளார். இவருடன் மோதும் மேக்னஸ் கார்ல் சென், இதுவரை ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிச்சுற்று இரு போட்டிகளை கொண்டுள்ள நிலையில், இரண்டும் சமமானால் நாளை டைப் பிரேக்கர் சுற்று நடைபெறும். நேற்று நடைபெற்ற முதல் போட்டி சமன் செய்யப்பட்ட நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது சுற்றில் வெற்றி பெறுபவர் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வர்.

இதில் வெற்றி பெறும் நபருக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 91 லட்ச ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் நபருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 66 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும்.

Related posts