நமது சிங்கப்பூரில் தொற்றின் அளவு சற்று குறைந்து வரும் இந்த நேரத்தில் பல எல்லை கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகின்றது. பல புதிய நாடுகளுக்கு VTL சேவைகளை அளித்தால், சிங்கப்பூர் வந்திறங்குபவர்களுக்கு தளர்வுகள். வந்திறங்கிய பிறகு தனிமைப்படுத்துதலில் தளர்வுகள் என்று நாட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் சில தினங்களுக்கு முன்பு நமது அரசு பணி அனுமதி வைத்திருப்பவர்களைத் தவிர்த்து, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கான நுழைவு அனுமதித் தேவைகள் பிப்ரவரி 21 முதல் அகற்றப்படும் என்று கூறியது.
அதாவது, தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகள் (VTLs) மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் தகுதியுள்ள பாஸ் வைத்திருப்பவர்கள் VTL-க்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஆனால் அதே நேரத்தில் நடைமுறையில் உள்ள குடியேற்ற நுழைவுத் தேவைகள் மற்றும் சுகாதார நெறிமுறைகளை அவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, வேலைவாய்ப்பு பாஸ், Dependent அல்லது எஸ் பாஸ் போன்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தும், அவர்களுக்கான தளர்வு பிப்ரவரி 21 அன்று இரவு 11.59 மணி முதல் அமலுக்கு வரும். கடந்த மார்ச் 2020 முதல் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்னர் அனைத்து நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களும் ஒப்புதல் பெற வேண்டும். இது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குடியரசில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளில் ஒன்று. சுமார் 2 வருட காலத்திற்கு பிறகு தற்போது பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவரும் சரியான நேரத்தில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
சரி இது ஒருபுறம் இருக்க, பலர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் என்றும், இதனால் சிங்கப்பூருக்கான விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து பின் பயணிக்க முடியாமல் அவதிப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
பயணிகள் செய்யும் தவறு என்ன?
தற்போது Entry Approval இல்லாமல் நாட்டிற்குள் வர (பிப்ரவரி 21க்கு பிறகு) அனுமதிக்கப்பட்டுள்ளது நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே (அவர்களுக்கும் விமான பயணத்தில் சிக்கல்கள் உள்ளதாக தெரிகிறது). அரசு அறிவித்துள்ளபடி Work Permit Holders இந்த திட்டத்தின் கீழ் நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் பல பயணிகள் உரிய பாஸ் இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்து வருவதாகவும். ஆனால் குறிப்பிட்ட பயண தேதியில் உரிய பாஸ் இல்லாதவர்கள் பயணிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசு சொன்னது என்ன?
அரசு தந்த அறிக்கையில் முதல் வரியிலேயே “வேலை அனுமதி வைத்திருப்போர்” அதாவது Work Permit Holders தவிர முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட Long Term Pass holders அதாவது EP எனப்படும் Employment Pass, Dependent’s pass அல்லது S Pass வைத்திருப்பவர்கள் மட்டும் நுழைவு அனுமதியின்றி நாட்டிற்குள் வரலாம் என்று கூறியுள்ளது. ஆகவே அரசு தகவல் அளிக்கும் வரை Work Permit Holders காத்திருந்து Entry Approval பெறலாம் சிங்கப்பூருக்குள் வர ஆவனம் செய்யலாம்.
News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007