TamilSaaga

சிங்கப்பூரில் படிக்கச் சென்றதை மறந்து அனாவசியமான செயலில் ஈடுபட்ட இந்திய மாணவர்கள்!

சிங்கப்பூரில் உள்ள பிரபல துணிக்கடையில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆடைகளில் ஸ்கேன் செய்வதற்கான பார்கோடுகள் வைக்கப்பட்டிருக்கும். பார்கோடுகளை அகற்றி விட்டால் கடையிலிருந்து வெளியில் செல்லும் பொழுது சத்தம் எழுப்பாது.

இவற்றை நன்கு அறிந்து கொண்ட மாணவர்கள் இதை பயன்படுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூரில் ஸ்டுடென்ட் பாஸ் வைத்திருக்கும் நால்வரும் ஒரே வீட்டில் தங்கி படிப்பவர்கள் ஆவர். இவர்கள் அக்டோபர் இரண்டாம் தேதி யூனி குளோ என்ற பிரபல துணி கடையில் டிரஸ் வாங்க நினைப்பது போல் உள்ளே நுழைந்துள்ளனர். அங்குள்ள சில ஆடைகளை எடுத்துக்கொண்டு பார் கோடுகளை அகற்றியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் தாங்களாகவே பணம் செலுத்தும் வசதி கொண்ட பகுதிக்கு சென்று 3 வெள்ளி மதிப்புள்ள பைகளை மட்டும் வாங்கி அதில் ஆடைகளை போட்டுக்கொண்டு சுமார் 7:30 மணி அளவில் கடைகளை விட்டு வெளியேறி உள்ளனர்.அவர்கள் திருடிய 67 ஆடைகளின் மதிப்பு 1700 டாலர் ஆகும். ஒருமுறை திருடிய பின் சிக்காமல் சென்ற காரணத்திற்காக மறுபடியும் அதே போல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக நான்கு நாட்களுக்கு பிறகு அதே கடைக்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது அவர்கள் அவசர அவசரமாக பையில் ஆடைகளை திணித்த பொழுது அங்குள்ள சூப்பர்வைசர் அவர்களிடம் செய்தி கேட்டபொழுது சரியான பதில் கிடைக்கவில்லை. தனது நண்பர் ரசீதை எடுத்துச் சென்று விட்டார் என முன்னுக்கு பின்னாக முரணாக பதில் அளிக்கவும் சூப்பர்வைசருக்கு சந்தேகம் வந்துவிட்டது. அப்பொழுது அவர்கள் மொத்தம் 72 ஆடைகளை திருடியிருந்தனர். அதன் மதிப்பு சுமார் 2300 வெள்ளி ஆகும். உடனடியாக போலீசருக்கு புகார் அளிக்க போலீசார் சிசிடிவி கேமராவின் மூலம் அவர்களை அடையாளம் கண்டனர். அதன் பிறகு விசாரித்ததில் அவர்கள் நடந்ததை ஒப்புக்கொண்டனர்.இதையொட்டி மாணவர்களுக்கு 40 நாள் முதல் 65 நாள் வரை சிறை தண்டனை ஏம்மா கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts