தங்கம் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒரு விலை மதிப்புமிக்க பொருளாகும். இந்த உலகத்தில், விலைமதிக்க முடியாத உலோகங்கள் பல இருக்கின்றன. இருப்பினும் தங்கத்திற்கு நிகராக மற்ற உலோகங்கள் எடுபடுவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் அனைத்து விதமான நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. வீட்டில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதை பொறுத்து அந்த வீட்டின் மதிப்பு அறியப்படுகிறது. மற்ற நாடுகளை கணக்கிடுகையில் இந்தியாவில் தங்கத்திற்கு தனி அந்தஸ்து ஒவ்வொரு இல்லத்திலும் கிடைக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து , வளர்ந்து வயதாகும் வரை தங்கத்தின் தேவை இருக்கிறது. ஆண் பெண் வேறுபாடு இன்றி தங்கத்தை தேடி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்தியா உற்பத்தி செய்வதை விட பல மடங்கு அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இவ்வாறு தங்கத்தின் தேவை அதிகரிப்பதால் அதனுடைய மகத்துவம் , விலையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுமட்டும் இன்று சர்வதேச சந்தையும் தங்கத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தை பொறுத்தே உலக பொருளாதார அமைகிறது. முந்தைய காலகட்டங்களில் தங்கத்தின் தேவை இந்தியாவில் மட்டுமே அதிகமாக இருந்த நிலையில் தற்போது மற்ற நாடுகளிலும் தங்கத்தை வாங்கவதை அல்லது தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகிறார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கின்றது.
கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக உயர்ந்து இருக்கிறது, இதற்கு பல வகை காரணங்கள் இருக்கின்றன. முக்கிய காரணங்களாக இருப்பது அதிகபட்சமான பணவீக்கம் மற்றும் புவி சார் அரசியல் ஆகும். உலக அளவில் விலை உயர்ந்த உலோகங்களுக்கான தேவைகள் அதிகரிப்பது ஒரு காரணமாகும். தங்கத்தை ஒரு பொருளாக சேமிப்பது என்ற நிலைமை மாறி தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமாகிவிட்டது. கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 2000 ரூபாய் அதிகத்துள்ளது. ஜனவரி மாதம் 2024 ஆம் ஆண்டு தங்கம் ஒரு அவுன்ஸ் 2000 டாலர்கள் விற்கப்பட்ட நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 2400 டாலர்களுக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் விற்கப்படுகிறது. இன்னும் வரும் காலகட்டங்களில் தங்கத்தின் விலை உயர்வு அதிகபட்சமாக இருக்கக்கூடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு ஏறிக் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை எப்படி ஒரு சாமானிய மனிதன் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். கோல்டு ஸ்டாக்ஸ் மற்றும் ETF போன்றவற்றை வாங்குவது ஒரு நல்ல செயலாக இருக்கும். நீங்கள் தங்கத்தில் லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர் ஆக இருந்தால், கோல்டு ஸ்டாக்ஸ் மற்றும் ETF போன்றவற்றை முதலீடு செய்யலாம். இது போன்ற முதலீடுகள், பங்கு சந்தை போன்றே செயல்படும். நீங்கள் குறுகிய காலகட்டத்தில், லாபம் பார்க்க எண்ணுகிறீர்கள் என்றால் பங்குகளை பற்றி தீர கவனிக்க முடிவெடுக்க வேண்டும். பொதுவாக எல்லா ETF ஒன்று போல இரா. இதில் அபாயங்களும் இருக்கின்றன , எனவே தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
இன்னும் தங்கத்தின் விலை ஏறுவதற்குள், சிறுக சிறுக தங்கத்தை வாங்கி சேமித்து வைக்க வேண்டும். எப்படி இருப்பினும் தங்கத்தின் விலை ஏறு முகத்தில் இருப்பதால் தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். வருங்கால பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களால் தங்கத்தின் விலை விழுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவே, தங்கமாக சேமித்து வைப்பது ஒரு நல்ல திட்டமாகும்.
தங்கத்திற்காக, தங்க பங்குகளை வாங்குவது அல்லது ETA மூலம் முதலீடு செய்வது என்பது ஒரு வழியாக இருந்தாலும். தங்க கட்டிகளை வாங்கி வைப்பது ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் உண்மையான தங்க கட்டிகளை வாங்கி வைப்பதன் மூலம் சில நன்மைகளை பெறலாம். உங்களிடம் தங்கம் எப்பொழுதும் இருக்கும் அதனுடைய மதிப்பு என்றும் மாறாது. ஆனால் நீங்கள் ஸ்டாக்சில் முதலீடு செய்வதின் மூலம் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்க நேரிடும். தங்க கட்டிகளாக வாங்கி வைப்பதன் முக்கிய பலன், பணவீக்க காலங்களில் உங்களுக்கு சாதகமாகவும், அரசாங்கத்திற்கு சாதகமாகவும் செயல்படும். மற்ற முதலீடுகளை காட்டிலும் தங்கத்தை கட்டிகளாக வாங்கியது நல்ல முறை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தின் விலை ஏறும்போது சந்தையின் மற்ற பங்குகள் குறையக்கூடும். இதனால் நிலையற்ற சந்தை உருவாக வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் அதாவது, தங்கத்தை தங்கமாகவே வாங்கி வைப்பதால் சந்தையின் நிலை இல்லா தன்மையை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும். பொருளாதார மந்தை காலகட்டங்களிலும் இது உங்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.
தங்கத்தில் முதலீடு செய்யும் போது, அதனால் ஏற்படும் சில பாதகங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சில நன்மைகள் இருப்பினும், இது போன்ற விலை உயர்ந்த உலகங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்காது. பங்கு சந்தை முதலீடுகள் கொடுக்கும் லாபத்தை நீங்கள் தங்கத்தில் எதிர்பார்ப்பது சில சமயங்களில் ஒத்து வராது. வணிக ஆலோசகர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், உங்களுடைய முதலீடுகளில் 10 சதவீதத்திற்கு மேல் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். எனவே, தங்கத்தை வாங்குவதில் யோசித்து தீர ஆராய்ந்து செயல்பட்டால் நிச்சயம் லாபகரமாக இருக்கும்.