Makino Asia என்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள எந்திர பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1937 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உற்பத்தி நிறுவனமாகும். இன்று மிகப்பெரிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். சிங்கப்பூரின் உற்பத்தி நிறுவனங்களில் இந்த நிறுவனம் தனித்தன்மையுடன் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக தற்போது உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு இது ஒரு முன்னோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் தற்போது வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தைப் பற்றி முழு விவரம் மற்றும் அந்த வேலை வாய்ப்புகள் என்னென்ன? யார் அதற்கு விண்ணப்பிக்க முடியும்? என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Makino Asia என்பது உற்பத்தி சார்ந்த நிறுவனமாக மட்டுமல்லாமல் இங்கு ரிசர்ச், டெவலப்மென்ட், உற்பத்தி மற்றும் வணிக நிர்வாகம் என அனைத்தும் ஒரே இடத்தில் நடக்கிறது. அனைத்து விதமான செயல்களும் ஒரு கூரைக்கு கீழ் நடப்பதால் தான் இந்த நிறுவனம் இத்தகைய மேன்மையை அடைந்திருக்கிறது. இந்த நிறுவனம் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டதால், சிங்கப்பூரையே தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சிங்கப்பூரைத் தாண்டி பல நாடுகளில் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தில் பலவிதமான தனித்தன்மை வாய்ந்த சேவைகள் செய்யப்படுகிறது. 3d ட்ராயிங் முதல் மெட்டல் கட்டிங் வரை அனைத்து விதமான சேவைகளும் சிறந்த முறையில் தகுதி வாய்ந்த பணியாளர்களை வைத்து சிறப்பாக செய்து தரப்படுகிறது.
உலகில் உள்ள 40 நாடுகளுக்கு மேல் இந்த Makino Asia உடைய பொருட்கள் வெற்றிகரமாக விற்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வெற்றி ரகசியம், அனைத்து விதமான customer requirement பூர்த்தி செய்யப்படுகிறது, தரத்திற்கு முன்னுரிமை அளிப்பது, தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு சரியான வேலை அளிப்பது, மிகவும் துல்லியமாக பொருட்களை உற்பத்தி செய்வது, அது மட்டுமின்றி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்வது என இதுவே இந்த நிறுவனத்தின் வெற்றிக்கான கோட்பாடுகள் ஆகும். சாப்ட்வேர் மற்றும் டிஜிட்டல் துறைகளும் இங்கு பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே, பல துறைகளை சார்ந்தவர்களும் இங்கு பணி செய்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில், உங்களுக்கு வேலை வேண்டுமா? இதோ அறிவித்திருக்கிறது வேலை வாய்ப்புகளை.
என்ன விதமான வேலை வாய்ப்பு என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், இந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என்னென்ன வசதிகளை அனுபவிக்கலாம் எவ்வாறு வேலை சூழல் அமையும் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். Makino -வில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சுதந்திரமான இடமாக அமைகிறது. இங்கு பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சி மட்டுமல்லாமல் நிறைய வெகுமதிகளும் அளிக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் புதுவிதமான கருத்துக்களை முன்மொழிபவர்கள், அதிக ஆற்றல் மற்றும் திறன் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். மேலும் புதுவிதமான சவால்களை ஏற்க தயாராக இருப்பவர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனிமனித அதாவது பணியாளர்களின் தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றது. நிறுவனம் எவ்வாறு தன்னுடைய பணியாளர்களை தேடித்தேடி எடுக்கின்றதோ அதேபோல் அவர்களுக்கும் அனைத்து விதமான சலுகைகளையும் சமூகமான பணி சூழலையும் அமைத்து தருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் வொர்க் லைஃப் பேலன்ஸ் மெயின்டைன் செய்ய ஊக்குவிக்கிறது.
எவ்வாறு இந்த நிறுவனம் பணியாளர்களுக்கு வசதியாக, மற்றும் அவர்களின் வொர்க் லைஃப் பேலன்ஸை மெயின்டைன் செய்ய உதவுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம். Makino நிறுவனத்திற்கென்று தனியாக கிளப் ஹவுஸ், gym, pool வசதிகள் இருக்கிறது. இது மட்டும் இன்றி பல பொழுதுபோக்கு அம்சங்களும் இதனுள் இருக்கின்றது. இங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு வேலையில் இருக்கும் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு அனைத்து விதமான வசதிகளும் இடம்பெற்றிருக்கிறது. ஒரு நிறுவனத்தின் பணியாளராக இதுவே முதன்மையான தேவையாகும். இவை அனைத்தையும் தாண்டி செம்மையாக பணிபுரிபவர்களுக்கு பல வெகுமதிகளும் இங்கு அளிக்கப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட நிறுவனத்தில் வேலை பெறுவதற்கு பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிறுவனத்தில் தற்போது வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது என்ன வேலை? யார் யார் அதற்கு விண்ணப்பிக்கலாம்? அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
Additive Manufacturing Materials Intern எனும் பதவிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அதாவது மே மாதம் 15 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை மெட்டீரியல் அனாலிசிஸ், டெஸ்டிங் மற்றும் ரிப்போர்ட்டிங் சார்ந்த வேலைகள் ஆகும். Post-processing of AM parts சார்ந்த பணியாகும். சரி, இந்த வேலைகளைப் பற்றி இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ள அவர்களுடைய இணையதளத்தை பார்க்கவும். தற்போது இந்த வேலைக்கான தேவைகள் என்னென்ன? யார் இந்த பதவி விண்ணப்பிக்க முடியும்? தற்போது மெக்கானிக்கல், ஏரோஸ்பேஸ், மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் தொடர்புடைய துறைகளில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு இது பொருந்தும். வாரத்தில் ஐந்து நாட்கள் என்ற வீதம் ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் பணிபுரிய விருப்பம் உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தும். செயல்திறன் மிக்க மாணவர்களுக்கு இந்த வேலை பொருந்தும். Referrals இருப்பவர்களுக்கு கூடுதலாக முன்னுரிமை அளிக்கப்படும். எனவே நீங்கள் துறை சார்ந்த மாணவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைகிறது.
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது? நீங்கள் இந்த நிறுவனத்தின் இணையதள பகுதிக்கு சென்று அப்ளை நவ் இன்னும் ஆப்ஷனை செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய அனைத்து விதமான விவரங்களையும் அதில் பதிவிட வேண்டும். உங்களுடைய வருமான எதிர்பார்ப்புகள், கல்வி சான்றிதழ்கள் இதனோடு உங்களுடைய சமீபத்திய புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும். இவை அனைத்தும் முடித்த பின் உங்களுடைய விண்ணப்ப படிவம் நிறுவனத்திற்கு சென்று சேரும். நீங்களும் உங்களுக்கு தகுதியான வேலையா என்பதை பார்த்து உடனே விண்ணப்பியுங்கள்.