TamilSaaga

சிங்கப்பூரில் வேலையில் உள்ள Work permit ஊழியரா நீங்க… இந்த விஷயத்தில் MOMல் உங்களுக்கு இருக்கும் இந்த கட்டுப்பாடு… மீறவே முடியாது

சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் Work permit ஊழியருக்கு சிங்கப்பூரின் சிட்டிசனையோ அல்லது PR பெண்ணையோ திருமணம் செய்ய இருக்கிறீர்கள் என்றால் அது எவ்வளவு எளிதில்லை தான். அதற்கு சிங்கப்பூரில் MOMமிடம் கண்டிப்பாக முன் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு என்ன சான்று கேட்பார்கள் எனத் தெரிந்து கொள்ள இதை படிங்க.

சிங்கப்பூரில் தற்போது S-Pass அல்லது E-Passல் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த அனுமதி தேவைப்படாது. இதற்கு முன்னரே இந்த பாஸில் வேலை செய்து இப்போது சிங்கப்பூரில் இல்லை என்றாலும் உங்களுக்கு அனுமதி தேவை இருக்காது. ஆனால் வொர்க் பெர்மிட்டில் சிங்கப்பூரில் வேலை செய்தவர்களுக்கோ, தற்போது வேலையில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கேட்பார்கள்.

திருமணம் செய்து கொள்ள இருக்கும் தம்பதிகளில் ஒருவர் Singapore citizen or PRஆக இருந்தால் இருவரும் கையெப்பமிட்டு Declaration form கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட்டின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய பக்கம் அல்லது வொர்க் பெர்மிட் அடையாள அட்டை நகல், வேலை செய்யும் நிறுவனத்தில் கடந்த 6 மாதத்திற்கான சம்பள விவரம், கல்வி சான்றிதழ், பெயரை மாற்றி இருந்தால் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.

இதில் சிலருக்கு மேலும் சில சான்றிதழ்கள் கூட கேட்கப்படும். இருவரில் ஒருவருக்கு இரண்டாம் திருமணம் என்றால் முதல் திருமணத்தின் சான்றிதழை இணைக்க வேண்டும். டைவர்ஸானவர் என்றால் அதற்குரிய சான்றிதழை இணைப்பதும் முக்கியம். எல்லா சான்றிதழும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லாத ஆவணங்களுக்கு, அசல் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பின் நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மொழிபெயர்ப்பைச் செய்ய service நிறுவனங்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்றால் மேலும் தகவல்கள் கிடைக்கும்.

இந்த சான்றிதழை கொண்டு MOMல் அப்ளே செய்தால் அப்ரூவல் குறித்து 4 வாரங்களுக்குள் சிங்கப்பூர் குடிமகன் அல்லது PRக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து விடுவார்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts