TamilSaaga

டேய் கலையலங்காரம்… அந்த quarantine போர்ட்டை மாட்டிடலாமா? உலக நாடுகளில் அதிகரிக்கும் XBB வைரஸ்… வெளிநாட்டு விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் இந்தியா

கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக மறைந்து கொண்டிருந்த நேரத்தில் சமீபத்திய நாட்களில் புதிய வேரியண்ட்டின் பரவல் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் ஆரம்ப புள்ளியான சீனாவில் தான் இந்த வேரியண்ட்டின் தாக்கமும் அதிகமாகி இருக்கிறது. இதுகுறித்து Institute for Health Metrics and Evaluation தெரிவிக்கையில் 2023 ஏப்ரல் மாதத்திற்குள் உலக நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் விமான நிலையங்களிலும் சில கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் எல்லா சர்வதேச விமான நிலையங்களிலும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து ரேண்டம் முறையில் 2% பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யவும் உத்திரவிட்டுள்ளனர். அவர்களில் யாருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த வகை வேரியண்ட் மிக வீரியமானது என்றும் ஸ்கேனிங் பரிசோதனையில் கூட தெரிவதில்லை. நேரடியாக நுரையீரலை பாதித்து விடுகிறது. இந்த வகையினருக்கு SWAP டெஸ்ட்டில் கூட நெகட்டிவ் தான் வரும். மேலும் இது மிக வேகமாக பரவக்கூடியது என்றும். கூட்டமான இடங்களுக்கு செல்லாதீர்கள். உங்களுக்கும் பிறருக்கும் 1.5மீ இடைவேளை விட்டே இருங்கள் என்ற ஒரு வாட்ஸ் செய்தி தொடர்ந்து பரவி வருகிறது.

மேலும், அந்த மெசேஜில் XBB பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு காய்ச்சல் அல்லது இருமல் இருக்காது. உடல் வலி, தலைவலி, கழுத்து வலி, நிமோனியா, பசியின்மை போன்ற அறிகுறிகள் மட்டுமே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் அனைத்தும் பொய் என்று இந்திய அரசு தனது மறுப்பினை தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும், WHO அறிக்கையின்படி XBB வேரியண்ட் அதிக ஆபத்தானது இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பாக இருக்க முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்தவுடன் கைகளை கழுவுங்கள். அடிக்கடி சானிட்டைசர் பயன்படுத்துவதையும் மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பொறுப்புடன் இருந்தாலே கொரோனா பரவல் கட்டுப்படும். அதிலும் சர்வதேச பயணிகள் இதில் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts