இந்திய அரசாங்கம் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு ஆகஸ்ட் 5 முதல் புதிய விதியினை அமல்படுத்தியுள்ளது. அது என்ன விதி என்பதை நாம் தெளிவாக பார்க்கலாம். இதற்கு முன் பாஸ்போர்ட் அப்ளை செய்ய வேண்டுமானால் முதலில் ஆன்லைனில் அப்ளிகேஷனை ஃபில் செய்து சப்மிட் செய்வோம். அதன் பின்னர் ஆன்லைனில் சமர்ப்பித்த ஆவணங்களை நேரில் எடுத்துக்கொண்டு பாஸ்போர்ட் ஆபீசுக்கு செல்ல வேண்டும். நமக்கு அப்பாயின்மென்ட் குறிக்கப்பட்ட தேதியில் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கப்படும்.
அதில் ஒரு எழுத்து தவறாக இருந்தாலும் அல்லது குறிப்பிட்ட ஆவணங்கள் கொண்டு செல்லாமல் இருந்தாலோ, திருப்பி அனுப்பப்படுவர். முறையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு திரும்பவும் அப்பாயின்மென்ட் பெற்றுக் கொண்டுதான் நாம் பாஸ்போர்ட் ஆபீசுக்கு நேரில் வரவேண்டும். இதுதான் இதுவரை உள்ள நடைமுறை. ஆனால் இப்பொழுது நம்முடைய ஆவணங்களை சமர்ப்பிக்க புது ஆப்பினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த ஆப்பின் பெயர் டிஜி லாக்கர் (digilocker). இந்த ஆப்பை எதற்காக பயன்படுத்துகிறார்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். இதுவரை ஆவண சரிபார்ப்பு என்பது பாஸ்போர்ட் ஆபீசுக்கு சென்று நாம் செய்த நிலையில் அதை எளிதாக்குவதற்கு அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் யுத்தி தான் இந்த ஆப். நாம் அட்ரஸ் ப்ரூப் மற்றும் ஐடி ப்ரூப்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை இந்த ஆப் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
டிஜி லாக்கர் ஆப்பிள் அக்கவுண்ட்டை ஓபன் செய்வதற்கு முதலில் ஆதார் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். அதற்கு நம் ஆதார் எண்ணோடு தொலைபேசி எண்ணானது முதலில் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஓடிபி மூலம் இந்த ஆப்பிற்குள் நுழைந்து நமக்கு தேவையான ஆவணங்களான ஆதார், பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ்கள், டிரைவிங் லைசென்ஸ் உட்பட இவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் நாம் பாஸ்போர்ட் ஆபீஸ்க்கு சென்று ஆவணங்களை சரிபார்க்க மணி கணக்கில் காத்திருக்க தேவையில்லை.இந்த நடைமுறையானது ஆகஸ்ட் 5 முதல் அனைத்து பாஸ்போர்ட் ஆபீஸ்களிலும் நடைமுறைக்கு வரும் என்று வெளியிடப்பட்டுள்ளது.