TamilSaaga

20 வருடம் கழித்து சிங்கப்பூரில் பெண்ணிற்கு தூக்கு தண்டனை அறிவிப்பு… பல விமர்சனங்களை எதிர்கொண்டு கடமையை செய்யும் சிங்கப்பூர்!

போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாகவே சிங்கப்பூரில் தண்டனைகள் கடுமையாக இருப்பதால் அங்கு மக்கள் தவறு செய்ய அஞ்சுவர். ஆனால் அதையும் மீறி தவறு செய்து மாட்டிக் கொள்பவர்கள் திரும்பவும் தவறு செய்யக்கூடாது என்பதற்காகவே கடுமையான தண்டனைகளை சிங்கப்பூர் அரசு வழங்குவது வழக்கம். மேலும், போதைப்பொருள் கடத்தல் குற்றமானது சிங்கப்பூரை பொறுத்தவரை மிகப் பெரிய குற்றமாகும்.

சமூக ஒழுக்கத்தை கெடுக்கும் விஷயம் என்பதால் சிங்கப்பூர் அரசு அதற்கு பாரபட்சம் காட்டாமல் தண்டனைகளை வழங்குவது வழக்கம். 2018 ஆம் ஆண்டு சரிதேவி டிஜாமானி என்ற பெண் 30 கிராம் ஹெராயின் கடத்தி வந்துள்ளார் என்ற கிடைத்த தகவலை ஒட்டி போலீசார் கைது செய்து விசாரணை துவக்கினர். அதன்பிறகு அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு தூக்கு தண்டனை வழங்க சிங்கப்பூர் அரசு உறுதி செய்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் 50 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கிற்காக மற்றொரு இளைஞருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வகையில் இந்த வாரத்தில் இரண்டாவதாக மற்றொரு வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சிங்கப்பூரை பொறுத்தவரை 500 கிராம் இருக்கும் மேல் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது வழக்கம் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரும் நிலையில் சிங்கப்பூர் அரசனது இந்த சட்டத்தினை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகின்றது. இந்நிலையில் ஒரு பெண்ணிற்கு தூக்கு தண்டனை அளிக்கும் சம்பவமானது 20 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடப்பதால் தற்பொழுது சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

Related posts