TamilSaaga

குரங்கு அம்மை காய்ச்சல்.. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் ‘எஸ்கேப்’ ஆக முடியாது – விமான நிலையங்களுக்கு புது உத்தரவு

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏகப்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவில் 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய பரிசோதனையில் இந்தியாவிலும் சிலருக்கு இந்த நோய் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளிடம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 4 (3+1) மாத Training Employment Pass (TEP)-யில் வேலைக்கு செல்ல அதிக ஆட்கள் தேவை

விமான நிலையங்கள், துறைமுகங்கள், சர்வதேச சாலை எல்லை வழியாக இந்தியா வருபவர்கள் என ஒருவர் விடாமல் குரங்கு அம்மை நோய் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன.

Monkey pox எனப்படும் குரங்கு அம்மை நோய் வன விலங்குகளை தாக்கக்கூடியவை. எனினும், இது தற்போது மனிதர்களையும் தாக்குகிறது இந்த நோய் மனிதரை தாக்கினால் 2 முதல் 4 வாரங்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்படும். காய்ச்சல், தடித்த உடல் புண்கள் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts