TamilSaaga

ஒரே கடையில் வேலை.. திருமணமான நபருடன் தகாத உறவு – லாட்ஜில் “சம்மதிக்க” மறுத்த இளம் பெண் கொலை

தகாத உறவினால் ஏற்படும் துன்பங்கள் குறித்து எவ்வளவோ நிகழ்வுகள் நம்மை எச்சரித்து சென்றாலும் வெகு சிலர் அதை கண்டுகொள்வதில்லை என்றே கூறவேண்டும். கேரளாவில் உள்ள கொல்லம் அருகே உள்ளது தான் பாவூர் என்ற ஊர், அந்த பாவூரை சேர்ந்தவர் தான் பிரவீன் (வயது 32). திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நகை கடையில் பணிபுரிந்து வந்துள்ளார், பிரவீனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் சாலையில் “சடன் பிரேக்” போட்ட பேருந்து ஓட்டுநர் : பஸ்சுக்குள் நிலைத்தடுமாறி விழுந்த முதியவர் பலி!

பிரவீன் வேலைபார்த்த அதே கடையில் காயத்ரி என்ற 23 வயது பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார், ஒரே கடை என்பதால் இருவரும் அடிக்கடி நட்பாக பேசி பழகியுள்ளனர். இந்த நெருங்கிய நட்பு வலுப்பெற அது காதலாக மாறி இருவரும் நெருக்கமாக இருந்துவந்துள்ளார். ஆனால் இந்த கள்ளக்காதல் பிரவீனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இந்த தவறான சகவாசம் வேண்டாமென்று பல முறை எச்சரித்த பிரவீனின் மனைவி, ஒருகட்டத்தில் பொறுமையிழந்து அவர் வேலை செய்த நகைக்கடைக்கு சென்று சண்டையிட்டுள்ளார். அதன் பிறகு காயத்ரி வீட்டிற்கும் சென்று சண்டையிட்டுள்ளார்.

இந்த நிகழ்விற்கு பிறகு பிரவீன் மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் காயத்ரி வேறு நகைக்கடையில் வேலைக்கு சேர, பிரவீன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பி அருகில் உள்ள நாகர்கோவிலில் வந்து செட்டில் ஆகியுள்ளார். எல்லாம் நன்றாக சென்ற நிலையில் இந்த மார்ச் மாத துவக்கத்தில் தம்பானூர் என்ற இடத்தில் உள்ள விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளார் பிரவீன். சற்று நேரத்தில் காயத்ரியும் அங்கு வர இருவரும் உரையாடியுள்ளார். காயத்ரி வந்த இரண்டு மணி நேரம் கழித்து பிரவீன் மட்டும் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

காயத்ரி இருந்த அறை வெகுநேரமாக பூட்டியிருக்க இரவு 12 மணியளவில் விடுதிக்கு போன் செய்த பிரவீன் அங்கு தான் தங்கியிருந்த அறையில் காயத்ரி பிணமாக கிடக்கிறாள் என்று கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தபோது, கட்டிலில் காயத்ரி பிணமாக கிடந்துள்ளார். உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது, போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு பிரவீனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் பிரவீன் பரவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. VIPகளை போல சாலையை கடந்த நீர்நாய்கள் – சிங்கப்பூரர்கள் எப்போதுமே Great!

தன்னை விட்டு விலகிவிடுமாறு காயத்ரியிடம் கூற அதற்கு அவர் மறுத்ததால் தலையணை அவர் முகத்தின் மீது வைத்து அமுக்கி கொன்றதாக பிரவீன் குற்றத்தை ஒப்புக்கொண்டு. தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts