TamilSaaga

சிங்கப்பூரில் ஓயாது பத்து மணி நேரத்திற்கு மேல் உழைக்கும் டிரைவர்கள்… உடம்பு போச்சுன்னா வராது… உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

நம் நாடுகளில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் நம்பியிருப்பது டிரைவர் வேலைகளை தான். படிப்பிற்கு ஏற்ற வேலை சில பேருக்கே கிடைக்கும் என்ற நிலை இருக்கும் பொழுது படிக்காதவர்களுக்கும் படித்தவர்களுக்கு நிகரான சம்பளத்தை வழங்கும் வேலை டிரைவர் வேலைதான்.

இதனால்தான் வேலையில் அதிக ரிஸ்க் உள்ளது என்பதை அறிந்தும், குடும்பத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் பலரும் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர். டிரைவர் வேலை என்றால் உட்கார்ந்து கொண்டே பார்க்கும் வேலை தானே.. அதில் என்ன கஷ்டம் இருக்கப் போகின்றது என்று நினைப்பவர்கள் அதிகம்.

ஆனால் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் டிரைவர் வேலை பார்ப்பவர்கள் எட்டு மணி நேரம் வேலை பார்த்தால் மட்டும் தேவையான ஊதியத்தை எடுக்க முடியாது. அதற்கு மேல் பத்து முதல் 12 மணி நேரம் வேலை பார்த்து OT-யின் மூலம் சம்பாதித்து தங்கள் குடும்பத்தை காப்பவர்களை அதிகம்.

அப்படி இருக்கையில் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு வேலை பார்க்கும் டிரைவர்கள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனை உடல் சூடு. உடல் சூட்டை போக்க தண்ணீர் குடிக்க வேண்டும், நீர்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிட வேண்டும், வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் போன்ற டிப்ஸ்கள் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் இவற்றுடன் சேர்த்து உடல் சூட்டை ஒரு சில நிமிடங்களில் குறைக்கக்கூடிய வீட்டு வைத்தியம் தான் நாம் இப்பொழுது பார்க்க போகின்றோம்.

இதற்கு தேவையானது விளக்கெண்ணெய் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் டிரைவர் வேலையில் உள்ளீர்கள் என்றால் வீட்டிற்கு வந்ததும், குளித்து முடித்துவிட்டு உங்களது கால் கட்டை விரல்களில் விளக்கெண்ணெயின் மூலம் நன்கு மசாஜ் செய்யுங்கள்.

இரண்டு நிமிடம் நன்கு மசாஜ் செய்து பின்பு ஒரு துணியால் அந்த எண்ணெயை துடைத்து எடுத்து விடலாம். இப்படி செய்யும் பொழுது ஒரு சில நிமிடங்களிலேயே நம் உடல் சூடு குறைவதை கண்கூடாக காணலாம்.

உடல் சூட்டை சமன் செய்வதற்கு உள்ள மற்றும் ஒரு வழி பிராணாயாமம். காலை எழுந்ததும் குறைந்தது 15 நிமிடங்கள் ஆவது பிராணாயாமம் செய்வது சூட்டின் காரணமாக உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை சரி செய்யும்.

நம் உடல் தான் நமக்கு முதல் சொத்து. அதை சரியாக பாதுகாத்துக் கொண்டால்தான் நம் குடும்பத்திற்காக இன்னும் நன்றாக உழைக்க முடியும். எனவே டிரைவர் வேலை செய்யும் நண்பர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ செய்து உங்கள் உடல் நலனை காத்துக் கொள்ள தமிழ் சாகாவின் சிறு பதிவு.

Related posts